இந்திய ரயில்வேயில் 26,567 காலிப் பணியிடங்களை ஒரே நேரத்தில் நிரப்ப அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் 26,567 காலிப் பணியிடங்களை ஒரே நேரத்தில் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய ரயில்வேயில் 26,567 காலிப் பணியிடங்களை ஒரே நேரத்தில் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்துக்கு மட்டும் 1,666 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. காலிப் பணியிடங்கள் மொத்தம் உள்ள காலிப் பணியிடங்களில் பொதுப் பிரிவினருக்கு 13,464 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) 6,521 இடங்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு (எஸ்.சி.) 4,122 இடங்களும், பழங்குடியினருக்கு (எஸ்.டி.) 2,460 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. வயது வரம்பு இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 01.07.2014 தேதி அன்று 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவின ருக்கு 5 ஆண்டுகளும், ஒ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு. இதர விவரங்கள்பணி : அசிஸ்டெண்ட் லோகோ பைலட் (ஏ.எல்.பி.) மற்றும் டெக்னீசியன். சம்பளம் : ரூ.5,200-20,200 + கிரேடு சம்பளம் ரூ.1,900 கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஃபிட்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், மில்ரைட், ரேடியோ அண்ட் டி.வி. மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், டர்னர் போன்ற பிரிவுகளில் ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும். தேர்வு முறை: எழுத்து மற்றும் திறனறித் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசி நாள்: 17.02.2014 மாலை 5.30 மணி. தேர்வு நாள் : 15.06.2014 விண்ணப்பிக்கும் முறை, எழுத்துத் தேர்வு, கல்வித் தகுதி உள்ளிட்ட முழுமையான விவரங்களை www.rrbchennai.gov.in, www.rrbbnc.gov.in, www.rrbthiruvananthapuram.gov.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி