ஆசிரியர் தகுதித்தேர்வில் தகுதியானவர்களுக்கு பிப்.24ல் பணி நியமன உத்தரவு? - Dinakaran News


பிப்.24ல் பணி நியமன உத்தரவு? 


ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுடன், தற்போது மதிப்பெண் சலுகை மூலம் புதிய பட்டியலில் இடம்பிடிப்பவர்களின் சான்றிதழ்களும் அடுத்த இரு வாரங்களுக்குள் சரிபார்க்கப்பட்டு முடிக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பின்னர் வேலை நியமன உத்தரவு தயாரிக்கப்பட்டு பாடம் வாரியாக இந்த கல்வி ஆண்டிலேயே ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட உள்ளவர்கள் விபரம் அறிவிக்கப்படும். இவர்கள் அனைவருக்கும் வரும் 24ம் தேதி (ஜெயலலிதா பிறந்த நாள்) முதல்வர் கையால் சென்னையில் வைத்து ஆசிரியர் பணி நியமன உத்தரவு வழங்கப்படலாம் என தெரிகிறது. எஸ்சி, எஸ்டிக்கு கூடுதல் வாய்ப்பு கடந்த 2012ம் ஆண்டு நடந்த தேர்வில் எஸ்சி., எஸ்டி பிரிவில் அதிக தேர்வர்கள் தேர்ச்சி பெற வில்லை. இதனால், அவர்கள் பிரிவில் 400 காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. தற்போது இடஒதுக்கீடு பிரிவினருக்கு சிறப்பு வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளதால், இப்பிரிவினருக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி