மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு: மார்ச் மாதம் அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 50 லட்சம் ஊழியர்கள், 30 லட்சம் பென்ஷன்தாரர்கள் பயனடைவார்கள்.

இது குறித்து உயர் அதிகாரிகள் கூறுகையில், ""ஆரம்ப கால மதிப்பீட்டின்படி இந்த ஆண்டு 10 சதவீதத்திற்கு குறைவாக அகவிலைப்படி இருக்காது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கணக்கிடப்பட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும். இதற்கான முறையான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகலாம்'' என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே, மத்திய அரசு ஊழியர்கள் பிப்ரவரி 12 முதல் 2 நாள்கள் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி