முதல் வகுப்பு மாணவர்கள் மற்றும் மெல்லக் கற்போருக்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்ட தமிழ் எழுத்துகளின் வரிசை காணொளிக் காட்சி (VIDEO) பற்றிய விவரங்கள்

அன்பு மிக்க ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம்.


இன்றைய சூழலில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்து வருவதை நாம் அனைவரும் அறிவோம். இதற்கு பெற்றோரின் ஆங்கில மோகம் தான் காரணம் என்பதையும் அறிவோம். இக்கால பெற்றோருக்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் தான் உள்ளனர். ஆகவே குழந்தைகளின் தேவையை பெற்றோரால் நிறைவேற்ற முடிகிறது. ஆங்கில பயிற்றுமொழி பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதை பெற்றோர் பெருமையாகவும், குழந்தைகளின் எதிர் காலத்துக்கு ஒரு முதலீடாகவும் கருதுகின்றனர். ஆனால் அரசுப் பள்ளிகளில் பயிலு ம்குழந்தைகள் பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பசூழலில் இருந்து தான் வருகின்றனர். மாணவர்களின் கல்வியில் பெற்றோரின் பங்களிப்பு என்பது மிகவும் குறைவு. 


இந்த சூழ்நிலையில், கல்வித்துறை அலுவலர்களும் ஊடகங்களும்அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வாசித்தல் திறன் மிகவும் குறைவாகவே இருப்பதாக சுட்டிக் காட்டுகின்றனர். அதுவும் தாய்மொழியாம் தமிழில் வாசிப்பதிலேயே பின் தங்கிய நிலைகாணப்படுவதாக கூறப்படுகிறது. தமிழில் வாசிக்க தெரியவில்லை என்பதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமான காரணங்கள் இரண்டு தான்:


1. எழுத்துகள் தெரியாததால் வாசிக்க இயலாமை

2. கற்றுக் கொண்ட எழுத்துகளை தினமும் மீள் பார்வை செய்யாமை 


இவற்றை களைய எங்களது சிறு முயற்சியாக ஒரு காணொளிக்காட்சியை உருவாக்கியுள்ளோம். இந்த காணொளிக் காட்சியில் மாணவர்கள் பள்ளிக்கு வரும் முன்பே அறிந்துள்ள எளிய சொற்களைஉரிய படங்களுடன் சொல்லாக காட்சிப் படுத்தி, பிறகு எழுத்துக் கூட்டிஉச்சரிக்கும் விதமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. அதாவது 'க' என்ற எழுத்தை அறிமுகப் படுத்த 'கல்' படத்துடன் 'கல்' என்ற வார்த்தையும்வரும். பிறகு 'க' என்ற எழுத்து மட்டும் வரும். அதன் பிறகு 'ல்' என்றஎழுத்து வரும். இதன் பிறகு 'கல்' என்ற வார்த்தை வரும். இதுபோல் தமிழில் பயன்படுத்தப் படும் அனைத்து எழுத்துகளையும் கற்கும் விதமாக இக்காணொளிக் காட்சி உருவாக்கப் பட்டுள்ளது. 


இக்காணொளிக் காட்சியில் பயன் படுத்தப் பட்டுள்ள வார்த்தைகள் பெரும்பாலும் மாணவர்கள் பள்ளிக்கு வரும் முன்பே அறிந்திருப்பதால் எளிதாக கற்பர் என நம்புகிறோம். வார்த்தைகள் எளிதாகவும், சிறியவையாகவும் இருப்பதால் மாணவர்கள் எளிதாகவும், விரைவாகவும் கற்க முடியும். வார்த்தைகளுக்குரிய படங்களும் இருப்பதால் எழுத்தில் ஐயப்பாடு இருப்பின் படங்களைப் பார்த்து உச்சரிக்கும் போது அவர்களாகவே ஐயத்தை நிவர்த்தி செய்து கொள்ளமுடியும். எழுத்துக் கூட்டி உச்சரிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் (ஒவ்வொரு எழுத்தாக வருவதால்) ஒவ்வொரு எழுத்தின் வடிவத்தையும் அதற்குரிய ஒலி வடிவத்தையும் நன்கு கற்றுக் கொள்ள முடியும். 


தினசரி இக்காணொளிக் காட்சியை காண செய்வதன் மூலம் எழுத்துகளை நன்கு மனதில் பதிய செய்யலாம். சுருங்கக் கூறின், தெரிந்ததிலிருந்து தெரியாததுக்கு செல்லுதல், அறிந்ததிலிருந்து அறியாததுக்கு செல்லுதல், எளிதிலிருந்து கடினத்துக்கு செல்லுதல் என்ற உளவியல் அடிப்படையில் அமைக்கப் பட்டுள்ளதால் கற்றலில் மாணவர்களின் ஆர்வம் மிகுதிபடும். ஆசிரியரின் பணிச்சுமை குறையும். தரமான கற்றல் நிகழும். 2 முதல் 8 வகுப்பு வரை எழுத்துதெரியாத மாணவர்களுக்கும், மெல்லக் கற்போருக்கும் இக்காணொளிக் காட்சி பெரிதும் பயன்படும்.


இப்புதிய யுக்திகளை கையாள்வதன் மூலம், உங்களுக்கும் உங்கள் பள்ளிக்கும் சமுதாயத்தில் பெருமை கிடைக்கும். உங்கள் பள்ளி மாணவர்களின் வாசித்தல் திறன் மேம்படும். வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க கூடும். மாணவர்களின் வீட்டில் இக்காணொளிக் காட்சி காணும் சாதனங்கள் இருப்பின் மாணவர்கள் வீட்டில் காணும் விதமாக உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் வழங்கலாம்.


இறுதியாக ஒன்றை கூற விரும்புகிறோம். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், எத்தனையோ கற்றல் - கற்பித்தல் அணுகுமுறைகள் வந்தாலும், முதல் வகுப்பை பொருத்தவரை எழுத்துகளை கற்றுக் கொடுப்பது தான் பாடத்திட்டம். முதல் வகுப்பில் எழுத்துகளைக்கற்காத மாணவர்கள் தான் வாசித்தலிலும், பிற பாடங்களை பயில்வதிலும் பின் தங்குகின்றனர். பின்னர் பள்ளிக்கு செல்வதை நிறுத்தி விடுகின்றனர்.


'எழுத்தறிவித்தவன் இறைவன்' என்னும் முதுமொழிக்கேற்ப, முதல்வகுப்பு மாணவர்களுக்கு எழுத்துகளை கற்றுக் கொடுப்பது எவ்வளவு சிரமமான பணி என்பதை நாங்கள் அறிவோம். முதல் வகுப்பு ஆசிரியர்களின் பணி சுமையை குறைக்கும் விதமாக இக் காணொளிக்காட்சி அமையும் என்று நம்புகிறோம். HD தரத்தில் உருவாக்கப்பட்ட இக் காணொளிக் காட்சி ரூ.40 க்கு (2 DVD க்கள் - SONY Brand DVD) உங்களுக்கு கிடைக்கும். இக் காணொளிக் காட்சி Power Point Presentation , JPEG வடிவத்திலும் கிடைக்கும். உங்கள் வசதிக்கேற்ப Pen Drive , DVD இவற்றிலும் பதிவு செய்து கொள்ளலாம்.


இக் காணொளிக் காட்சி கிடைக்கும் இடம் : 


திரு.நடராஜன், குரு ஜெராக்ஸ், (கிருஷ்ணா உணவகம் எதிரில்), மாநகராட்சி வணிக வளாகம், மத்தியப் பேருந்து நிலையம், திருச்சி - 620 001. 

தொலைபேசி : 94434 77376. 


வெளியூர் ஆசிரியர்கள் குரியர் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். 

இக் காணொளிக் காட்சியை இணைய தளம் மூலமும் காணலாம்.






இதுபற்றி உங்கள் கருத்துகளை எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


Courtesy : http://trstrichy.blogspot.in/

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி