தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் காலியாகக்கிடக்கும் ஊழியர்களின் இடங்களை நிரப்ப கடந்த 2011–ம்ஆண்டு ஜூலை மாதம் 30–ந்தேதி குரூப்–2 எழுத்துதேர்வு நடத்தப்பட்டது.
இதில் நேர்முகத்தேர்வு உள்ள பணிகளும் உண்டு. நேர்முகத்தேர்வு இல்லாமல் தேர்வு செய்யப்படும் பணிகளும்உண்டு. நேர்முகத்தேர்வு பணிக்கு 3 கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்பட்டு பணிஅமர்த்தப்பட்டனர்.அதுபோல நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளுக்கு 4 முறை கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி அமர்த்தப்பட்டனர்.
எனவே மீதம் உள்ள பணியிடங்களை நிரப்பநேர்முகத்தேர்வு உள்ள பணிஇடங்களுக்கு 4–வது கட்ட கலந்தாய்வும் நேர்முகத்தேர்வு அல்லாத பணியிடங்களுக்கு 5–வது கட்ட கலந்தாய்வும் பிப்ரவரி 5 மற்றும் 6 தேதிகளில் சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.கலந்தாய்வுக்கு வரவேண்டியவர்களின் பட்டியல், வரவேண்டிய நாள் விவரம் அனைத்தும் தமிழ்நாடு குரூப்–2அரசுப்பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செயலாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.