அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
அகத்தின் அழகு முகத்திலே.
அகப்பட்டவனுக்கு அஷ்டமத்திலே சனி, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாமிடத்திலே ராசா.
அச்சமற்றவன் அம்பலம் ஏறுவான்.
அஞ்சிலே வளையாதது அம்பதில் வளையுமா?
அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்.
அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
அடிக்கிற காற்றுக்கும்,பெய்கிற மழைக்கும் பயப்படு.
அடியாத மாடு படியாது.
அடுத்த வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே.
அதிகாரி வீட்டு கோழிமுட்டை குடியானவன் வீட்டுஅம்மியையும் உடைக்கும்.
அதிஷ்டவான் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும்.
அம்மணத்தேசத்தில் கோமணம் கட்டினவன் பைத்தியக்காரன் .
அம்மாவை ஆத்தங்கரையில் பார்த்தா பிள்ளையை வீட்டுலபோய் பார்க்கவேண்டாம்.
அம்மாவைக் குளிக்குமிடத்தில் பார்த்தால் மகளை வீட்டில்பார்க்க வேண்டியதில்லை.
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
அரை காசு உத்தியோகமாக இருந்தாலும் அரசாங்கஉத்தியோகமாக இருக்கணும்.
அவிசாரியானாலும் முகராசி வேண்டும்.
அவுசாரி என்று யானை மேல் போகலாம், திருடி என்றுதெருவில் போக முடியாது.
அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்.
அழுதாலும் தொழுதாலும் அவதான் பிள்ளை பெறணும்.
அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
Visit: http://www.tnguru.com/ for latest Education / General News, Study materials, etc
அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.
அறுக்க மாட்டாதவன் கையில் ஐம்பத்தெட்டு அறிவாள்.
அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
அறுப்புக்காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுப்பதில்லை.
ஆசை அறுபது நாள் , மோகம் முப்பது நாள்.
ஆசை இருக்குகிறது தாசில் பண்ண,அதிஷ்டம் இருக்கிறதுகழுதை மேய்க்க.
ஆட மாட்டாத நடன மாதிற்குக் கூடம் கோணலாம்.
ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
ஆடிப் பட்டம் தேடி விதை.
ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம்.
ஆடு பகை குட்டி உறவா?
ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
ஆடையில்லாதவன் அரை மனிதன்.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
ஆதாயமில்லாமல் வியாபாரி ஆற்றோடு போகமாட்டான்.
ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
ஆழம் தெரியாமல் காலை விடாதே.
ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்.
ஆற்றிலே போகுது தண்ணீர் அப்பா குடி ஆத்தாள் குடி.
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
ஆனைக்கும் அடிசறுக்கும்.
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
இக்கரைக்கு அக்கரை பச்சை.
இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை.
இரைக்கிற ஊற்றே சுரக்கும்.
இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
Visit: http://www.tnguru.com/ for latest Education / General News, Study materials, etc
இளங்கன்று பயமறியாது.
இளமையில் கல்.
இறந்த காலத்தை என்றும் பெற இயலாது.
இனம் இனத்தையே சாரும்.
இனம் இனத்தோடு சேரும்.
இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலைஅறுக்கமாட்டானா?
ஈர நாவிற்கு எலும்பில்லை.
உடுத்திக் கெட்டான் பார்ப்பான், உண்டு கெட்டான் வெள்ளாளன்.
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதே.
உதட்டில் உறவு உள்ளத்தில் பகை.
உதைப்பானுக்கு வெளுப்பான் சலவைக்காரன்.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
உயிர் காப்பான் தோழன்.
உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்பாது.
உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
உரலு போயி மத்தளத்துக்கிட்ட முறையிட்டதாம்.
உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடியாது.
உளவு இல்லாமல் களவு இல்லை.
உறவு போகாமல் கெட்டது, கடன் கேட்காமல் கெட்டது.
உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.
ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சினேகம் இழுக்கும்.
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன் பிள்ளை தானேவளரும்.
ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே.
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி.
Visit: http://www.tnguru.com/ for latest Education / General News, Study materials, etc
ஊருடன் ஒட்டி வாழ்.
ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும்.
எட்டாக் கனிக்குக் கொட்டாவி விடாதே.
எடுக்கிறது பிச்சை, ஏறுகிறது பல்லக்கு.
எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?
எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற்போல்.
எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம்.
எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
எரியும் கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
எருமை வாங்கும் முன் நெய் விலை பேசாதே,
எலி வளையானாலும் தனி வளை.
எலி வளையானாலும் தனி வளைவேண்டும்.
எளியாரை வலியார் வாட்டினால் வலியாரைத் தெய்வம்வாட்டும்.
எறும்பூரக் கல்லும் தேயும்.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
ஏர் பிடித்தவன் என்ன செய்வான்,பானை பிடித்தவள் பாக்கியம்.
ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல்,செய்கிறவனுக்கு தலைச்சுமை.
ஏழை என்றால் மோழையும் பாயும்.
ஏழை சொல் அம்பலம் ஏறாது.
ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால்முடவனுக்குக் கோபம்.
Visit: http://www.tnguru.com/ for latest Education / General News, Study materials, etc
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
ஐந்தும் மூன்றும் அடுக்காய் இருந்தால் அறியாப்பெண்ணும் கறிசமைப்பாள்.
ஐயர் இடம் கொடுத்தாலும் அடியார் இடம் கொடார்கள்.
ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்.
ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது.
ஒரு கண்ணுல வெண்ணை மறு கண்ணுல சுண்ணாம்பு.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்.
ஒருவனைக் கொன்றவன் உடனே சாவான்,பலரைக்கொன்றவன் பட்டமாள்வான்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
ஓட்டுல புட்டவிச்சு உமிக்காந்தல்ல களி கிண்டிருவா.
ஓடும் நாயைக் கண்டால் துரத்தும் நாய்க்கு இளக்காரம்.
ஓரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்.
ஓருவனுக்கு ஒருத்தி.
கஞ்சி கண்ட இடம் கைலாசம் , சோறு கண்ட இடம் சொர்க்கம் .
கட்டி வைத்த பணத்தைத் தட்டிப் பறித்தார்போல.
Visit: http://www.tnguru.com/ for latest Education / General News, Study materials, etc
கடன் இல்லாக் கஞ்சி கால் வயிறு போதும்.
கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.
கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்குஉடைக்காதே.
கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்.
கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக்குறைவில்லை.
கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
கண்கெட்ட பிறகா சூரிய வணக்கம்?
கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு.
கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.
கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தானே வரும்.
கரும்பு தின்னக் கூலியா?
கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
கல்லடிக்குத் தப்பினாலும் கண்ணடிக்குத் தப்பாது.
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
Visit: http://www.tnguru.com/ for latest Education / General News, Study materials, etc
கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்.
கழுதை அறியுமா கற்பூர வாசனை?
கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
கள்ளன் அச்சம் காடு கொள்ளாது.
கற்றுக் கொடுத்த பாடமும் கட்டிக் கொடுத்த சாதமும் நீண்டநாள் வருவதில்லை.
கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு.
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
கன்னி இருக்க காளை மணம் ஏறலாமா ?
காக்காய் பிடித்தாவது காரியம் சாதித்துக்கொள்.
காக்கை உட்கார பனம்பழம் விழுந்ததுபோல.
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
காகம் திட்டி மாடு சாகாது.
காஞ்சிபுரம் போனால் காலாட்டி சாப்பிடலாம்.
காமாலைக் காரனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்.
காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
காலம் போகும் வார்த்தை நிற்கும்.
காலைச் சுற்றின பாம்பு கடியாமல் விடாது.
காற்றுள்ளே போதோ தூற்றிக்கொள்.
காவிரி ஆறு கஞ்சியாப் போனாலும் நாய்க்கு நக்கித்தான்குடிக்கணும்.
காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
கிட்டாதாயின் வெட்டென மற.
கிடைக்கப்போகும் பலாக்காயினும் கிடைக்கும் களாக்காய்மேல்.
கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
கிளி பிடித்ததோ,புலி பிடித்ததோ?
குட்டுப் பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப் பட வேண்டும்.
குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு
குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.
குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
குபேரன் பட்டணம் கொள்ளைபோனாலும் அதிர்ஷ்டவீணனுக்கு அகப்பைக் காம்பூ அகப்படுமா?
குமரிக்கு ஒரு பிள்ளை , கோடிக்கு ஒரு வெள்ளை .
குரைக்கிற நாய் கடிக்காது.
குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொள்ளலாமா?
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
குறைகுடம் கூத்தாடும்.
குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான்.
கூட்டுற வெலக்கு மாத்துக்குக் குஞ்சரம்னு பேராம்.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.
கூரையில சோத்த போட்டா ஆயிரம் காக்கா.
கூழானாலும் குளித்துக் குடி.
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.
கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
கெடுவான் கேடு நினைப்பான்.
கெண்டையைப் போட்டு வராலை இழு.
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்?
கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து கொக்கைப்பிடிப்பதுபோல.
கொட்டினாள் தேள் கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சி.
கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டுகொடுக்கும்.
கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.
கொல்லன் பட்டறையில் ஊசி விற்கலாமா?
Visit: http://www.tnguru.com/ for latest Education / General News, Study materials, etc
கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகுதிண்டாட்டம்.
கோழி மிதித்து குஞ்சு முடமாகுமா?
கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகிவிடாது.
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.
சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
சர்க்கரை என்றால் தித்திக்குமா?
சனியன் புடிச்சவளுக்குச் சந்தைக்குப் போனாலும் புருசன்அகப்படமாட்டான்.
சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் மட்டு.
Visit: http://www.tnguru.com/ for latest Education / General News, Study materials, etc
சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின்காலில் விழுவது மேல்.
சாண் ஏறினால் முழம் வழுக்கும்.
சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரங்கொடுக்கமாட்டான்.
சித்திரமும் கைப்பழக்கம்.
சித்திரை மாதத்தில் பிறந்த சீர்கேடனுமில்லை, ஐப்பசிமாததில் பிறந்த அதிர்ஷ்டவானுமில்லை.
சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.
சிறுகக் கட்டிப் பெருக வாழ்.
சிறுவர் இட்ட வெள்ளாமை விளஞ்சாலும் வீடு வந்து சேராது.
சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடி
சீலை இல்லை என்று சித்தி வீட்டுக்கு போனாளாம் , அவள்ஈ ச்சம் பாயை கட்டிகொண்டு எதிரே வந்தாளாம் .
சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.
சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
சுவரை வைத்துக் கொண்டல்லவா சித்திரம் எழுத வேண்டும்.
சூடு கண்ட பூனை அடுப்பங்கரையில் சேராது .
சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
சொல்லாது பிறவாது, அள்ளாது குறையாது.
சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும்எத்தனை நாளுக்குக் கூட வரும்?
சொறி பிடித்தவன் கை சும்மா இருக்காது.
சோளியன் குடுமி சும்மா ஆடுமா?
Visit: http://www.tnguru.com/ for latest Education / General News, Study materials, etc
தட்டிக்கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டம்.
தடி எடுத்தவன் தண்டக்காரன்.
தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் .
தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.
தம்பியுடையான் படைக்கஞ்சான்.
தருமம் தலை காக்கும்.
தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.
தலைவலியும் தரித்திரமும் தனக்கு வந்தால் தான் தெரியும்.
தன் கையே தனக்குதவி.
தன் பலம் கொண்டு அம்பலம் ஏறவேண்டும்.
தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்.
தனக்கு மிஞ்சித் தான் தருமம்.
தன்னைப்போல் பிறரை நினை.
தனிமரம் தோப்பாகாது.
தாட்சண்யவான் தரித்திரவான்.
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்.
தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை.
தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.
தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
தான் ஆடாது போனாலும் தன் தசை ஆடும்.
தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்.
தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே.
தானாடா விட்டாலும் சதையாடும்.
தானே கனியாத பழத்தைத் தடிகொண்டு அடிப்பதா?
தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.
Visit: http://www.tnguru.com/ for latest Education / General News, Study materials, etc
துணை போனாலும் பிணை போகாதே.
துள்ளுகிற மாடு பொதி சுமக்காது.
தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.
தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்.
தேரோட போச்சு திருநாளு , தாயோட போச்சு பிறந்தகம்.
தேளுக்கு மணியம் கொடுத்தால் நிமிஷத்துக்கு நிமிஷம்கொட்டும்.
தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலிருக்க மாட்டான்.
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.
தோல்வியே வெற்றியின் முதல் படி.
நக்குற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?
நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
நண்டு கொழுத்தால் வளையில் தங்காது.
நயத்திலாகிறது பயத்திலாகாது.
நரிக்கு நாட்டாமை கொடுத்தா கிடைக்கு இரண்டாடுகேக்குமாம்.
Visit: http://www.tnguru.com/ for latest Education / General News, Study materials, etc
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒருவார்த்தை.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல மனிதனுக்கு ஒரு வார்த்தை.
நல்லவனைப் போலிருப்பான் நடுச் சாமத் துரோகி.
நாம் ஒன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கிறது.
நாய் வாலை நிமிர்த்த முடியாது.
நாய் வேடம் போட்டால் குரைத்துத்தான் தீர வேண்டும்.
நாற்கலம் கூழுக்கு நானே அதிகாரி.
நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்.
நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.
நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
நிழலின் அருமை வெயிலிலே.
நிறை குடம் நீர் தளும்பாது.
நீருள்ள மட்டும் மீன் துள்ளும்.
நுணலும் தன் வாயால் கெடும்.
நெருப்பில்லாமல் புகையாது.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
நோயிருக்கும் இடத்தில் தான் வைத்தியனுக்கு வேலை.
Visit: http://www.tnguru.com/ for latest Education / General News, Study materials, etc
பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
பசி வந்திடப் பத்தும் பறந்து போம்.
பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்
படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.
படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோயில்.
படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்.
பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
பணம் பத்தும் செய்யும்.
பணமில்லாதவன் பிணம்.
பதறாத காரியம் சிதறாது.
பதறிய காரியம் சிதறும்.
பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
பருவத்தே பயிர் செய்.
பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்ட மாட்டான்.
பல துளி பெரு வெள்ளம்.
பல்லக்கு ஏற யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை.
பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு.
பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
பழம் பழுத்தால் கொம்பிலே தங்காது.
பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.
பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.
பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?
பள்ளத்திலே இருந்தா பொண்டாட்டி , மேட்டிலே இருந்தாஅக்கா !
Visit: http://www.tnguru.com/ for latest Education / General News, Study materials, etc
பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
பன்றி பல குட்டி சிங்கம் ஒரு குட்டி.
பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.
பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.
பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?
பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
பாம்பாட்டிக்குப் பாம்பாலே சாவு , கள்ளனுக்குக் களவிலேசாவு .
பாம்பின கால் பாம்பறியும்.
பாம்புக்குப் பால் வார்த்தாலும் நஞ்சைத்தான் கக்கும்.
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி.
பால் சட்டிக்கு பூனை காவல் வைக்கிறதுபோல்.
பாலுக்குக் காவல் பூனைக்கும் தோழன்.
பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்.
பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்.
பானை பிடித்தவள் பாக்கியசாலி.
பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.
பிச்சைக்காரனுக்குப் பயப்பட்டு அடுப்பு மூட்டாமல் விடுகிறதா?
பிள்ளை பெறப் பெறப் ஆசை , பணம் சேரச் சேர ஆசை .
Visit: http://www.tnguru.com/ for latest Education / General News, Study materials, etc
பிள்ளை பெறுமுன் பெயர் வைக்காதே.
பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.
புத்திமான் பலவான்.
புத்திமானே பலவான்.
புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.
புயலுக்குப் பின்னே அமைதி.
புலி பசித்தாலும் புல்லை தின்னாது.
புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?
பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது.
பூசணிக்காய் போவது தெரியாது, கடுகுக்குக் காதை அறுத்துக்கொள்வான்.
பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.
பூவிற்றகாசு மணக்குமா?
பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.
பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.
பெண் என்றால் பேயும் இரங்கும்.
பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி.
பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
பெண்ணென்று பிறந்த போது புருஷன் பிறந்திருப்பான்.
பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.
பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.
பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.
பேசப் பேச மாசு அறும்.
பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை.
பேராசை பெரு நஷ்டம்.
பொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய்.
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக்கெட்டவனுமில்லை.
Visit: http://www.tnguru.com/ for latest Education / General News, Study materials, etc
பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.
பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.
பொறி வென்றவனே அறிவின் குருவாம்.
பொறுத்தார் பூமியாள்வார் பொங்குவார் காடாள்வார்.
பொறுமை கடலினும் பெரிது.
பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.
போகாத ஊருக்கு வழி எது?
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?
போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.
மடியில் கனமிருந்தால் வழியில் பயம்.
மடியிலே கனமிருந்தால் வழியிலே பயம்.
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
மண்டையுள்ள வரை சளி போகாது.
மத்தளத்திற்கு இரு புறமும் இடி.
மதில் மேல் பூனை போல .
மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு.
மயிரை கட்டி மலையை இழு. வந்தால் மலை போனால் மயிர்.
மரம் வைத்தவன் தண்ணீர் வார்ப்பான்.
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
மருந்தே யாயினும் விருந்தோடு உண்.
மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்.
மலிந்த சரக்கு கடைத் தெருவுக்கு வரும்.
மனம் உண்டானால் இடம் உண்டு.
மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.
மனம் போல வாழ்வு.
மனமிருந்தால் மார்க்கமுண்டு
மனமுரண்டிற்கு மருந்தில்லை.
மன்னன் எப்படியோ மன்னுயிர் அப்படி.
மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.
மாடம் இடிந்தால் கூடம்.
மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?
மாடு கெட்டால் தேடலாம் மனிதர் கெட்டால் தேடலாமா?
மாடு மேய்க்காமற் கெட்டது பயிர் பார்க்காமற் கெட்டது.
மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.
Visit: http://www.tnguru.com/ for latest Education / General News, Study materials, etc
மாமியார் உடைச்சா மண் குடம், மருமக உடைச்சா பொன்குடம்.
மாமியார் உடைத்தால் மண் கலம் மருமகள் உடைத்தால் பொன் கலம்.
மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.
மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.
மாரடித்த கூலி மடி மேலே.
மாரி யல்லது காரியம் இல்லை.
மாவுக்குத் தக்க பணியாரம்.
மாற்றானுக்கு இடங் கொடேல்.
மானம் பெரிதோ? உயிர் பெரிதோ?
மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.
மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
மீ தூண் விரும்பேல்.
முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.
முட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டை இடிப்பார்களா?
முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படலாமா?
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.
முடி சான்ற மன்னரும் முடிவில் பிடி சாம்பலாவர்.
முதல் கோணல் முற்றுங் கோணல்.
முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா.
முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.
முருங்கை பருத்தால் தூணாகுமா?
முள்ளுமேல் சீலைபோட்டால் மெள்ள மெள்ளவாங்கவேண்டும்.
முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?
முன் ஏர் சென்ற வழியே, பின் ஏர் செல்லும்.
முன் ஏர் போன வழிப் பின் ஏர்.
முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?
முன்கை நீண்டால் முழங்கை நீளும்.
மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.
மெய்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி
வாழ்ந்தவனுமில்லை.
மெல்லப்பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்.
மெளனம் மலையைச் சாதிக்கும்.
மைத்துனன் உதவி மலைபோல.
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதே.
Visit: http://www.tnguru.com/ for latest Education / General News, Study materials, etc
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதுபோல்.
மொழி தப்பினவன் வழி தப்பினவன்.
மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம்பொன்.
யானை படுத்தாலும் குதிரை மட்டம்.
யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.
யானைக்கும் அடி சறுக்கும்.
யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்.
வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.
வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்தகுச்சு வீடு நல்லது.
வட்டி ஆசை முதலுக்கு கேடு.
வணங்கின முள் பிழைக்கும்.
வரவு எட்டணா செலவு பத்தணா.
வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.
வருந்தினால் வாராதது இல்லை.
வருமுன் காப்பதறிவு.
வல்லான் வகுத்ததே வாய்க்கால்.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
வழுக்கி விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை.
வளவனாயினும் அளவறிந் தளித்துண்.
வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்.
வாய் கருப்பட்டி கை கருணைக்கிழங்கு.
வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ.
வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
வாழ்வும் தாழ்வும் சில காலம்.
வாழு, வாழ விடு.
விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன்சித்தப்பன்.
விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
விதி எப்படியோ மதி அப்படி.
விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?
விரலுக்குத் தக்கதே வீக்கம்.
விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள்.
விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?
வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசிபோக.
விலை மோரில் வெண்ணெய் எடுப்பவன்.
விழுந்தவன் சிரித்தான் வெட்கத்திற்கஞ்சி.
விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?
விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.
விளையாட்டு வினையாயிற்று.
விளையும் பயிர் முளையிலே தெரியும்.
வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினைவிதைத்தவன் தினை அறுப்பான்.
Visit: http://www.tnguru.com/ for latest Education / General News, Study materials, etc
வீட்டில் எலி வெளியில் புலி.
வெட்டு ஒன்று துண்டிரண்டு.
வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
வெள்ளம் வருமுன் அணை போடு.
வெளுத்ததெல்லாம் பாலல்ல.
வெளுத்ததெல்லாம் பாலாகுமா, கறுத்ததெல்லாம்தண்ணீராகுமா?
வெறுங்கை முழம் போடுமா?
வெறும் வாய் மெல்லுகிற அம்மையாருக்கு அவல் அகப்பட்டதுபோல .
வேண்டாப் பொண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால்குற்றம்.
வேணும்னா சக்க வேரிலேயும் காய்க்கும்.
வேலிக்கு ஓணான் சாட்சி.
வேலியே பயிரை மேய்ந்தால் விளைவு என்ன?
வேலியே பயிரை மேய்ந்தால், விளைவது எப்படி?
ஜென்ம புத்தி செருப்பாலடித்தாலும் போகாது.
Source : http://tamiltip.blogspot.in/