'MOBILE MONEY ORDER SERVICE' திட்டம் 131 தபால் நிலையங்களுக்கு விரிவு.

தபால் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "மொபைல் மணியார்டர் சேவை' மேலும் 131 கிளைகளுக்கு விரிவுப்படுத்தப்படுகிறது.இதுகுறித்து கடலூர் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

இந்திய தபால் துறையும், பி.எஸ்.என்.எல்., நிர்வாகமும் இணைந்து துவங்கியுள்ள "மொபைல் மணியார்டர் சேவை' கடந்த நவம்பர் 16ம் தேதி மொத்தம் 103 தலைமை தபால் நிலையங்கள் மற்றும் துணைத் தபால் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இத்திட்டத்தில் மணியார்டர் அனுப்புபவரும், பெறுபவரும் மொபைல் போன் வைத்திருக்க வேண்டும். பணம் பெறவிரும்புபவர், சேவையுள்ள தபால் நிலையத்திற்கு சென்று உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய தொகையை செலுத்தியதும், 6 இலக்க ரகசிய குறியீட்டு எண் பணம் அனுப்புபவரின் மொபைலுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும்.தொடர்ந்து பணம் அனுப்பும் விவரம், பணம் பெற வேண்டிய தபால் நிலையம் குறித்த விவரங்களை பணம் பெறுபவரின் மொபைலுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும். பணம் பெறுபவர் விவரம், அவரது அடையாளச் சான்று, பணம் அனுப்புபவர் மூலம் பெறப்பட்ட ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றை, "மொமபைல் மணியார்டர் சேவை' உள்ள தபால் நிலையத்தில் காண்பித்து பணத்தை சில நிமிடங்களில் பெற்றுக் கொள்ள முடியும்.இந்த முறையில் ஒருவர் 1,000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரைஒரே நாளில்எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் அனுப்ப முடியும். இதற்கு சேவைக் கட்டணமாக 1,500 ரூபாய் வரை 45 ரூபாய், 5,000 ரூபாய் வரை 79 ரூபாய், 10 ஆயிரம் ரூபாயிற்கு 112 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தற்போது இந்த சேவை மேலும் 131 தபால் நிலையங்களில் விரிவுப்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி