ஆசிரியர் பயிற்சி பட்டய தேர்வு ( D.T.ED) முடிவு 6-ம் தேதி வெளியாகிறது.


மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தில் ஆசிரியர் பயிற்சி பட்டயத் தேர்வு எழுதியவர்களுக்கு வருகிற6-ம் தேதி முடிவு வெளியிடப்படுகிறது. அன்றைய நாளிலேயே மதிப்பெண்சான்றிதழ்களும் வழங்கப்பட இருக்கிறது.மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தில் பயின்று வரும் முதல்,இரண்டாம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கும்,தனித்தேர்வர்களுக்கும் தொடக்க கல்வி பட்டயத் தேர்வு கடந்த ஜீன்-2013ல் நடைபெற்றது.

இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் பட்டியல்கள் வருகிற வருகிற 6-ம் தேதி விநியோகப்பட இருக்கிறது.அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிலையங்களைச் சேர்ந்த ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு அந்தந்த நிலையங்களில் மதிப்பெண் பட்டியல்களை பெற்றுக் கொள்ளலாம். அந்தந்த பயிற்சி நிலையங்களிலேயே கணினி பயிற்சி பெற்ற அலுவலர்கள் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவும் மேற்கொள்ளப்பட இருக்கிறது. மேலும்,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கூட்டத்தை தவிர்க்கும் வகையில்,மதிப்பெண் சான்றிதழ் பெற்றவுடன் தனியாகவோ, இணையதள மையங்களிலோ பதிவு செய்து கொள்ளலாம்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி