DEO & DEEO மூலமாக மட்டுமே சான்றிதழ்களின் உண்மைத்தன்மை கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். - இயக்குநர் அறிவுரை

ந.க.எண்.000003/இஇ(ப)/2014 நாள் : 09.01.2014

பொருள் : மேல்நிலை / இடைநிலைத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை சரிபார்க்க அனுப்பப்படும் விண்ணப்பங்களின் நடைமுறையை மாற்றி அமைக்க உத்திரவிடுதல் - சார்பு.
- - - - -


அரசுத் தேர்வு இயக்ககத்தில் பன்னிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை அறிய வேண்டி மேல்நிலை / உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் / உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களிடமிருந்து வேண்டுகோள்கள் நேரிடையாக அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது அரசு அலுவலக நடைமுறைக்கு முரணாணதாகும்.

எனவே, அனைத்து வகை தலைமையாசிரியர்களும் அவர்களின் கட்டுபாட்டு அலுவலர்களான மாவட்டக் கல்வி அலுவலர்கள் / மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் போன்ற அலுவலர்கள் வழியாக தொகுத்து அனுப்பி வைத்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் / மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் உரிய அறிவுரை வழங்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

// உண்மை நகல் //
(ஓம்) ஒஒஒஒஒ
இயக்குநர்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி