எஸ்.சி.ஆர்.ஏ., தேர்வுக்கான இ-அட்மிட் கார்டுகள் வெளியீடு.

வரும் ஜனவரி 12ம் தேதி, Special Class Railway Apprentices (SCRA) தேர்வை யு.பி.எஸ்.சி., நடத்தவுள்ளது. இந்தியாவெங்குமுள்ள பல்வேறான மையங்களில் இத்தேர்வு நடத்தப்படவுள்ளது.இத்தேர்வுக்கான E-Admit Card -ஐ, 
அதிகாரப்பூர்வ இணையதளமான www.upsc.gov.in-ல் பெறலாம். 

எனவே, தேர்வெழுதுவோர், தங்களின் E-Admit Card -ஐ பதிவிறக்கம் செய்து, அதை கவனமுடன் சரிபார்த்து, ஏதேனும் தவறுகள் இருந்தால், அதை உடனடியாக UPSC -க்கு தெரியப்படுத்த வேண்டும்.மேலும், E-Admit Card -ஐ பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், கீழ்கண்ட தொலைபேசி எண்களில் UPSC உதவி மையத்தை காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை நாடலாம். அவை,011 - 23385271 / 23381125 / 23098543.E-Admit Card எக்காரணம் கொண்டும் தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படமாட்டாது.

E-Admit Card -ல், புகைப்படம் தெளிவாக இல்லையெனில், தேர்வெழுத செல்கையில், ஒரு அடையாள அட்டையுடன், 3 புகைப்படங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி