உத்தமபாளையம், ஜன.11 :
விவசாயத்திற்காக தோட்டங்களில் இயங்கும் மின்மோட்டார்களை இந்தியாவில் எந்த பகுதியில் இருந்து கொண்டும் செல்போன் மூலமாக ஆன் மற்றும் ஆப் செய்யும் வசதியுள்ள மொபைல் பம்ப் ஸ்டார்டர் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் துறை உதவி மேலாண்மை பொறியாளர் முகமதுஅலி கூறியதாவது:–
நீர்பாசன முறையை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மொபைல் பம்ப் ஸ்டார்டரின் சிறப்பம்சங்களாக இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் மொபைல் போன் மூலமாக இயக்கும் வசதி, கிணறு மற்றும் போர்வெல்களில் தண்ணீர் தீர்ந்தால் தண்ணீர் தானாகவே அணைந்து விடும். பவர் சப்ளை வந்தாலோ அல்லது பவர் சப்ளை கட்டானாலோ விவசாயிக்கு எஸ்.எம்.எஸ் வந்துவிடும்.
3 பேஸ் மின்னளவுகளை தனித்தனியாக அறியும் வசதி, இரவு நேரம் மற்றும் இடி, மின்னல் போன்ற சூழ்நிலையில் மின்மோட்டாரை பாதுகாக்க முடியும். வீட்டில் இருந்தபடியே ஆப்ரேட்டிங் செய்யப்படுவதால் நேரம், காலம் வீண் பராமரிப்பு செலவீனங்கள் தவிர்த்து விவசாயிகள் தங்கள் மின்மோட்டார்களை முழு பாதுகாப்புடன் இயக்க வாய்ப்புள்ளது என கூறினார்.
மேலும் இந்த எந்திரத்தின் மொத்த விலை ரூ.7500. இதற்கு அரசு மானியமாக 50 சதவீதம் உள்ளதால் ஆர்வமுள்ள விவசாயிகள் சிட்டா, ரேசன் கார்டு நகல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் உத்தமபாளையத்தில் உள்ள உதவி வேளாண்மை பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : மாலைமலர்