மேகங்களில் காற்றும் தண்ணீரும்தான் கலந்திருக்கின்றன. இந்த இரண்டுமே எந்த ஒளியையும் கிரகிக்கும் தன்மை கொண்டவை அல்ல. மாறாக, ஒளியை அப்படியே ஊடுருவச் செய்யும் கண்ணாடி போன்றவை. இருந்தும் மேகங்கள் பால் போன்ற வெண்மை நிறத்தில் இருப்பது, ஓர் ஆச்சரியமான அறிவியல் உண்மை.
மேகங்களில் தண்ணீர் மிகச் சிறிய துளிகளாகப் பரவி இருக்கிறது. மேகங்களுக்குள் ஒளி மிக அதிகத் தொலைவு ஊடுருவிச் செல்லும். அப்படிச் செல்லும்போது, ஏதாவது ஒரு நீர்த்துளியால், ஒளிச்சிதறல் ஏற்படும். இதனால் ஒளியின் பயணத் திசை சிறிதளவு மாறும். அடர்த்தியான மேகங்களில் ஒளியின் ஒவ்வொரு துகளும் பல நீர்த்துளிகள் மீது மோதக்கூடும். ஒளித்துகள்கள் இப்படி ஒவ்வொரு சுற்று மோதி வந்த பின்னர், அந்த ஒளி மேகத்துக்கு வெளியே பல்வேறு திசைகளில் கடத்தப்படும். அப்படிக் கடத்தப்படும்போது, அது உள்ளே நுழைந்த பகுதி வழியாகவே பெரும்பாலும் வெளியேறும்.
இந்த நிகழ்வின் அடிப்படையில், ஒரு மேகத்தின் நிறம் என்பது அனைத்து நிறங்களின் கலவையாகவே இருக்கும். பகல் நேரத்தில் மேகங்கள் பெரும்பாலும் வெள்ளை நிறத்திலேயே தோற்றம் தருகின்றன. சூரிய ஒளியில் இருந்து வரும் ஒளி, வானத்தின் வெளிர் நீல நிறத்துடன் சேர்ந்தால் கிடைப்பது அந்த நிறமே. அதேநேரம் மாலை நேரங்களிலும், அதிக வெளிச்சத்தை
உமிழும் நகரங்களுக்கு மேலேயும் வெள்ளை மேகங்களை அதிகம் பார்க்க முடியாது.