சென்னையில் இன்று சத்துணவு ஊழியர் சங்க மாநாடுசத்துணவு ஊழியர் சங்க மாநாடு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று நடக்கிறது. தமிழகத்தில் சத்துணவு திட்டத்திற்கென்று தனி துறை ஏற்படுத்த வேண்டும். வாழ்வதற்கு தேவையான ஊதியம் வழங்கி, பணி விதிமுறைகள் உருவாக்கி முழு நேர பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.அங்கன்வாடி பணியாளர், ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு, அரசு ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். ஆண் வாரிசு, கல்வித்தகுதி, வயது வரம்பு ஆகியவற்றை தளர்த்தி, வாரிசுகளுக்கு பணி ஆணை வழங்காமல், பல ஆண்டு காலமாக உள்ள தேக்க நிலையை மாற்றி உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி