2014-ம் ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகள் அனைத்தும் கணினிமயாமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் கேள்விக்கு சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.
தமிழகத்தில் மொத்தம் 33,800க்கும் மேற்பட்ட நியாயவிலைக்கடைகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும் ஒரு கோடியே 97 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளதாகவும் தெரிவித்தார். இவற்றை இணைக்கும் பணி தற்போது நடைபெற்ற வருவதாக குறிப்பிட்ட அமைச்சர் காமராஜ், இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து நியாயவிலைக் கடைகளும் கணினிமயமாக்கப்பட்டு விடும் என்றும் கூறினார்.