கல்வி அமைப்பின் தரத்தை மேம்படுத்துவது, புத்தாக்கமுறையில் கல்வி நிறுவன வளாக வாழ்க்கையை சிறப்பாக்குவது என்ற நோக்கங்களை அடிப்படையாக வைத்து, இளம் ஐ.டி., நிபுணர்களின் குழு ஒன்று, மென்பொருள் அடிப்படையிலான ஒரு வலைதளத்தை ருவாக்கியுள்ளது. www.backyard.in என்ற பெயருடைய அந்த வலைத்தளம், பேஸ்புக் போன்று, கல்வி மற்றும் சமூக நெட்வொர்க்கிங் சேவைத் தளமாகும். இந்த தளம், ஒரு கல்வி நிறுவனத்தில் அடங்கிய, முதல்வர், நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகிய அனைத்து தரப்பாருக்கும் உதவிகரமாக இருக்கும்.ஒட்டுமொத்த கல்லூரியையும், லாஜிக்கல் நூலால் கட்டி இணைக்கும் ஒரு அமைப்பாக இந்ததளம் திகழும். இதன்மூலம் மாணவர்கள் பல்வேறு தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.