பள்ளிப் பேருந்துகளில் பாதுகாப்பு அம்சங்களை கண்காணித்து, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய, பள்ளிப் பேருந்துகள் அனைத்தும், GPS (Global Positioning System) அமைப்பைக் கொண்டிருப்பது கட்டாயம் என்று CBSE அறிவித்துள்ளது.இதன்மூலம் பள்ளிப் பேருந்தின் இருப்பிடத்தை அறிய முடியும். பேருந்தில் பொருத்தப்படும் GPS அமைப்பு, Automotive Research Association of India என்ற அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.அனைத்து CBSE பள்ளிகளும், போக்குவரத்து காவல் துறையால் அங்கீகரிக்கப்பட்டவருடாந்திர பாதுகாப்பு போக்குவரத்து அமைப்பு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.GPS மூலமாக, பள்ளிப் பேருந்து எந்த இடத்தில் இருக்கிறது என்பதை அறிய முடிவதால், பள்ளி நிர்வாகத்தின் கண்காணிப்பிலேயே பேருந்தை எப்போதும் வைத்திருக்க முடியும்.