வாகை சூட வாழ்த்துவோம்!


கடையனையும் கடைதேற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வணக்கம்!

                கடந்த இரு வாரங்களாக தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடையனையும் கடைதேற்றுவதற்கு (95% தேர்ச்சி விழுக்காடு பெற வைப்பதற்கு) என்னென்னவெல்லாம் செய்யலாம், எப்படியெப்படியெல்லாம் செய்யலாம் என பல கருத்தரங்கங்களும், ஆய்வரங்கங்களும் அரசு மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகளாலும் நடத்தப்பெற்றன. அவ்வுயரிய நோக்கத்தை எட்டும் வகையில் ஆசிரியர்களுக்கும், மாணவ மாணவியர்களுக்கும் உதவிடும் வகையில் சிந்தித்ததன் விளைவே இக்கட்டுரை.
 
       சென்றவை, சென்றவையாகவே இருக்கட்டும்! வளமையான வருங்காலத்தை மட்டுமே நினைவில் வைப்போம்! நமது எண்ணம், சிந்தனை, செயல் எல்லாம் 95% தேர்ச்சி விழுக்காடு குறித்தே இருக்கட்டும். நம்மைக் குறித்த விமர்சனங்கள், கேலி கிண்டல்கள், எள்ளி நகையாடல்கள், தனியார் பள்ளி ஆசிரியர்களுடன் ஒப்பிட்டு திட்டமிட்டே செய்யும் சீண்டல்கள், இன்ன பிறவகை தாக்குதல்கள் ஆகியவற்றை ஒட்டு மொத்தமாக புறந்தள்ளுவோம்! சாதிப்போம் வாருங்கள் தோழமை ஆசிரியர்களே!

       பத்தாம் பொதுத்தேர்வுக்கு இன்னும் ஒன்பது வாரங்கள் உள்ளன. குறைந்த பட்சம் 45 வேலை நாட்களே உள்ளன. அதிலும் அலகுத் தேர்வுகள், திருப்புதல் தேர்வுகள் என சில செல்லமான. தேவையான குறுக்கீடுகள். அதையும் மீறி சாதிப்போம். ஒரு செயல் திட்டம் வகுத்துக்கொள்வோம். தலைமையாசிரியர்கள், சக ஆசிரியர்கள், பெற்றோர், மாணவ, மாணவியர்கள் மற்றும் உதவும் எண்ணம் கொண்டவர்கள் உதவியோடு சாதிப்போம். வரும் உதவிகளை வரவில் வைத்து, ஒத்துழைப்பின்மையை ஒதுக்கி வைத்து நமது குறிக்கோளை நோக்கி, நமது செயல் திட்டத்தினை செயல்படுத்தி வெற்றி பெறுவோம்.

       நமது செயல் திட்டம் மிக எளிமையானது; சிரமமில்லாததும் கூட. எந்த மாணவரால் (மாணவன் அல்லது மாணவியால்), எந்தெந்த பாடத்தின் மூலம் தேர்ச்சி சதவீதம் குறையும் வாய்ப்புள்ளது என்ற பட்டியலை தயார் செய்து கொள்வாம். நாம் அதை ஏற்கெனவே தயார் செய்து வைத்திருப்போம். அவர்களை, அந்தப் பாடத்தில் ஒரு நாளைக்கு ஒரு மதிப்பெண் எடுக்க வைப்பதே நமது செயல் திட்டம்.

       உங்கள் பள்ளி சூழல், தலைமையாசிரியர், சக ஆசிரியர்கள் ஒத்துழைபிற்கு ஏற்றவாறு செயல் திட்டத்தைச் செயல்படுத்தி வெற்றி வாகை சூட வாழ்த்துகள்.

       மாணவர்களை சிறப்பாக பயில்வோர், ஓரளவு பயில்வோர், நம் ஒத்துழைப்பு தேவைப்படுவோர் என பிரித்துக் கொள்ளுங்கள். சிறப்பாக பயில்வோர் பனை மரத்துக்கு ஒப்பானவர்கள். அவர்களுக்கு நாம் தேவையில்லை. ஓரளவு பயில்வோர் தென்னை மரத்துக்கு ஒப்பானவர்கள். அவர்களுக்கு நம் ஒத்துழைப்பு எப்போதாவது தேவை. மூன்றாம் இனத்தவர் பாக்கு மரத்துக்கு ஒப்பானவர்கள். அவர்களுக்கு எப்பொழுதும் நம் ஒத்துழைப்பு தேவை. நாம் இல்லையெனில் அவர்கள் இல்லை. அவர்களே நம் தேர்ச்சி சதவீதத்தினை பதம் பார்ப்பவர்கள். ஒரு வகையில் நம் திரைப்படத்தின் (இலக்கின்) கதாநாயகர்களும் அவர்களே! வில்லன்களும் அவர்களே! என்னே ஒரு முரண்பாடு!

       ஒவ்வொரு நாளும் முதல் 5 பாடவேளைகளை 5 பாடங்களுக்கும் ஒதுக்கியது போக, மதியம் 3 பாட வேளைகள் (தலைமையாசிரியர், சக ஆசிரியர்கள் ஒத்துழைப்போடு) நமக்கு கிடைக்கின்றன. முதல் இரு பிரிவினருக்கு எல்லா பாடங்களிலும் குறிப்பிட்ட பாடப்பகுதியை ஒதுக்கி அதை படிக்குமாறும், பயிற்சி எடுக்குமாறும் பணித்துவிடுங்கள். அவர்களை மேற்பார்வையிட சக ஆசிரியர்கள் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

       மூன்றாம் பிரிவினரை நம்முடன் வைத்துக்கொண்டு, அவர்கள் தேவையை, குறையை, கவனமின்மையைக் கண்டு, அவர்களோடு நாமும் இணைந்து அவர்களுக்கு உதவி, அவர்கள் தேர்ச்சி பெற வழிவகை செய்திடுவோம்.

முதல் வாரம்: 20-01-2014 முதல் 24-01-2014 வரை)
       தமிழ்:
       01. படிவங்கள் (வங்கி படிவங்கள், இரயில்வே முன்பதிவு படிவம், இன்ன பிற) நிரப்புதல்   - 5 மதிப்பெண்கள்
       02. முதல் பாடத்தில் பெரு வினா
       03. வாழ்த்து  மனப்பாடப்பகுதி
       04. கடிதம், விண்ணப்பம் எழுதுதல்
       05. தமிழ் எண்கள் பயிற்சி
                ENGLISH:
                01. Poetic Devices:
                                Alliteration, rhyming words, rhyming scheme in all poems.  3 marks
                02. Manliness – First six lines (atleast)
                03. Simple and easy questions in The model millionaire                                   2 marks
                04. Identity of a character and matching in Sam and the Piano lesson               2 marks
                05. Punctuation (Capital letter and (I), full stop or ? mark or ! mark  2 marks
                06. Making notes and summary preparation                                                    5 marks
                                Notes: Ask the students to important words using hyphen (-).   
                                Summary:            Rough copy:
                                                                Fair copy:
                                                                Given words: 150
                                                                Written words: 50 (roughly)
                07. English Paper I: Question No. :12
                                Construct a sentence using one of the following words given below:
                                (a) diminish (b) diminishing (c) diminished
                                                Ask the students to write:
                                                (1) Diminish is an English word.
                                                (2) Diminish is not a Tamil word.
                                                (3) I know the meaning of the word 'diminish'.
                                                (4) I don't know the meaning of the word 'diminish'.
                                                (5) Do you the meaning of the word 'diminish'?
       கணக்கு:
       01. வரைபடம்: அச்சுகளை வரைதல்
       02. வடிவியல்: உதவிப்படம் வரைதல்
       03. கணங்கள்: வென்படம் வரைதல்
       04. கணித அடிப்படை செயல்கள் (எண்கள் மற்றும் எழுத்துகள்)
       05. நிகழ்தகவு: சமவாய்ப்பு சோதனை, கூறுவெளி எழுதுதல்
       அறிவியல்:
       01. மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும், செயல்பாடும், தாவரங்களில் இனப்பெருக்கம், பாலூட்டிகள் ஆகியவற்றில் பட வினாக்கள்
       02. மரபும் பரிணாமமும் பாடத்தில் இரு ம்ற்றும் 5 மதிபெண் வினாக்கள்
       சமூக அறிவியல்:
       01. இந்தியா  அமைவிடமும் இயற்கை அமைப்பும்
02. இந்தியா  காலநிலை
03. இந்தியா  இயற்கை வளங்கள்
ஆகிய பாடங்களில் சிறு, குறு, நெடு வினாக்கள் மற்றும் இந்திய வரைபட பயிற்சி
             நன்றி! மீண்டும் சந்திப்போம்! வெற்றி பெறுவோம்!

S. RAVIKUMAR, GRADUATE TEACHER, GOVERNMENT HIGH SCHOOL, ARANGALDHURGAM, VELLORE – 635814 Ph. No. 9994453649     

Courtesy : http://www.padasalai.net/

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி