சி.பி.எஸ்.இ., வாரியத்தோடு போட்டியிட முயலும் மாநில வாரியம்


CBSE மாணவர்களுக்கு சமமாக, ராஜஸ்தான் கல்வி வாரிய மாணவர்களையும் மதிப்பெண் பெற வைக்க, உயர்நிலைக் கல்விக்கான ராஜஸ்தான் வாரியம்(RBSE) முயற்சியில் இறங்கியுள்ளது.

ஏனெனில், CBSE மாணவர்களின் மதிப்பெண்களோடு ஒப்பிடுகையில், RBSE வழியில் பயிலும் மாணவர்களின் மதிப்பெண்கள் குறைவாக உள்ளன. இதனால், அவர்கள் மாநிலத்தில் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறுவதில் தடங்கல்கள் ஏற்படுகின்றன.

இந்த இடங்களை CBSE மாணவர்களே, அதிகளவில் ஆக்ரமித்துக் கொள்கிறார்கள். எனவே, இப்பிரச்சினையை ஒரு முக்கியமான அம்சமாக எடுத்துக் கொண்டுள்ள RBSE, தனது மாணவர்களையும், அதிகளவிலான மதிப்பெண்கள் பெற வைக்கும் முயற்சிகளை எடுத்துள்ளது.

கடந்த 2012 - 13ம் கல்வியாண்டின் படி, ஆஜ்மீர் பிராந்தியத்தில், 10ம் வகுப்பில், CBSE மாணவர்களின் தேர்ச்சி 99.22%. ஆனால், RBSE மாணவர்களின் தேர்ச்சி 64%. எனவே, CBSE -ஐ போன்று, Comprehensive and Continues Evaluation(CCE) முறையை அமல்படுத்தவும் RBSE திட்டமிட்டு வருகிறது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி