கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நாட்டின் முதல் படகு அருங்காட்சியகம் துவக்கி வைக்கப்பட்டது. அருங்காட்சியகத்தை மாநிலத்தின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் (பொறுப்பு) உபேந்திராநாத் பிஸ்வாஸ் துவக்கி வைத்தார். அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்காளம் மற்றும் வங்க தேசத்தில் பயன்பாட்டில் உள்ள படகுகளின் மாதிரிகள் சுமார் 46 வரையில் வைக்கப்பட்டுள்ளது.மேலும் அருங்காட்சியகத்தில் வங்காள விரிகுடா கடல்பகுதியை சார்ந்த கோல்கட்டா நகரத்தில் பண்டைய காலத்தில் பயன்பாட்டில் இருந்த வணிகம் குறித்த இலக்கியங்கள் மற்றும் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.