மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற வங்கிகளில் கணக்கு தொடங்க வேண்டும் கலெக்டர் தகவல்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும் என்று கலெக்டர் நந்தகோபால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் நந்தகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கல்வி உதவித்தொகை
2013-2014-ம் ஆண்டு முதல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் மத்திய, மாநில அரசு வழங்கும் போஸ்ட் மெட்ரிக்(பிளஸ்-1 முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை) கல்வி உதவித்தொகையானது மாணவர்களின் வங்கி சேமிப்பு கணக்கில் நேரடியாக மின்னணு தீர்வை மூலம் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

எனவே, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற தகுதியுள்ள அனைத்து தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவ-மாணவிகளும் தேசிய மயமாக்கப்பட்ட ஒருங்கிணைந்த வங்கி செயல்பாடு வசதியுள்ள வங்கிகளில் மட்டுமே சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும்.

20-ந் தேதிக்குள்...
மத்திய, மாநில அரசு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு மாணவ-மாணவிகள் தங்களின் விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட கல்லூரி நிறுவனங்கள் மூலம் வருகிற 20-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வருமான உச்சவரம்பு ரூ.2½ லட்சம் ஆகும். மேலும் 2012-13-ம் கல்வியாண்டில் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்கள் 1074 மதிப்பெண்களும், மாணவிகள் 1085 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களும் தாங்கள் படிக்கும் கல்லூரி மூலமாக தமிழக முதல்-அமைச்சரிடம் தகுதி பரிசு பெறுவதற்கு வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு வருகிற 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி