தமிழக மக்களுக்கு அரசு வழங்கும் பொங்கல் பரிசு : ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரையும் இலவசம்.

தமிழக ரேஷன் கடைகளில், அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும், பொங்கல் பை மற்றும், 100 ரூபாய் ரொக்கப்பணம் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.தமிழர்களின் கலாசார விழாவான, பொங்கல் திருநாளை, பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக, கடந்த, தி.மு.க., ஆட்சியில், 2009ம் ஆண்டு, ரேஷன் கடைகளில், அரிசி வாங்கும், குடும்ப அட்டைதாரர்களுக்கு, அரை கிலோ பச்சரிசி, அரை கிலோ வெல்லம், 100 கிராம் பாசிப்பருப்பு, 20 கிராம் எடையுள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை அடங்கிய, பொங்கல் பை வழங்கப்பட்டது.இது ஏழை மக்களிடம், மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்து ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., 2013ம் ஆண்டு, ஒரு கிலோபச்சரிசி, ஒரு கிலோ வெல்லம், 100 ரூபாய் ரொக்கம் வழங்கியது.லோக்சபா தேர்தல், 2014ல் வர உள்ளதால், இம்முறை பொங்கல் பரிசாக, கூடுதல் தொகை வழங்கப்படும் என, எதிர்பார்ப்பு ஏற்பட்டது.இந்நிலையில், கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும் பொங்கல் பரிசு வழங்க, முடிவு செய்யப்பட்டது.இது தொடர்பாக, முதல்வர் விடுத்துள்ள அறிக்கை:நடப்பு, 2014ம் ஆண்டு, பொங்கல் திருநாளையொட்டி, தமிழகத்தில், ரேஷன் கடைகளில்,அரிசிபெறும், குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 100 ரூபாய் ரொக்கம் அடங்கிய பரிசு.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி