அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் பரிசு: அரசுக்கு ரூ.308 கோடி செலவு


சென்னை : அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 308.28 கோடி ரூபாய் மதிப்பில்பொங்கல் போனஸ் மற்றும் சிறப்பு போனசை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

கருணை தொகை:

இதுகுறித்த அவரது அறிக்கை:அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் முதன் முறையாகபொங்கலன்று கருணைத் தொகை வழங்குவதை எம்.ஜி.ஆர்.அறிமுகப்படுத்தினார். இதன்படி, 2012 - 13 நிதியாண்டிற்கு, 'சிமற்றும் 'டிபிரிவைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 3,000 ரூபாய் என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டு, 30 நாள் ஊதியத்திற்கு இணையாக போனஸ் வழங்கப்படும்.அரசு அலுவலர்களில், 'மற்றும் 'பிபிரிவினர்,ஆசிரியர்கள், 2012 - 13ம் நிதியாண்டில் குறைந்த பட்சம், 240 நாள் அல்லது அதற்கு மேலாக பணியாற்றிசில்லறை செலவினத்தின் கீழ்மாத அடிப்படையில் நிர்ணயிக்கப் பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதிநேரப் பணியாளர்கள்தொகுப்பூதியம் பெறுவோருக்கு, 1,000 ரூபாய் கிடைக்கும்.

மேலும்சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு திட்ட பணியாளர்கள்அங்கன்வாடி பணியாளர்கள்கிராம உதவியாளர்கள்பஞ்சாயத்து உதவியாளர்கள்ஒப்பந்த பணியாளர்கள்ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள்தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஒரு பகுதி தினக்கூலிகளாக பணியாற்றிபின் நிரந்தர பணியாளர்களாக அமர்த்தப்பட்டவர்களுக்கும், 1,000ரூபாய் கிடைக்கும்.

பல்கலை குழு:

உள்ளாட்சி அமைப்புகள்அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள்,ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள்,பல்கலைக்கழக மானியக் குழுஅனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுஇந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கீழ்சம்பள விகிதம் பெறுபவர்கள்அனைத்திந்திய பணி விதிமுறைகளின் கீழ் சம்பளம் பெறுபவர்கள் ஆகியோருக்கும் இந்தபோனஸ் பொருந்தும்.

ரூ.500 பரிசு:

ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள்தலையாரி மற்றும் கர்ணமாக இருந்தமுன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோருக்கு, 500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும். இதனால்அரசுக்கு, 308.28 கோடி ரூபாய் செலவு ஏற்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. முதல்வரின் இந்த போனஸ் அறிவிப்பைஅரசு ஆசிரியர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி