உலகளாவிய கம்ப்யூட்டர் போட்டி: சென்னை மாணவர் சாதனை

சென்னை: கம்ப்யூட்டரில் ஏற்படும் பல வகையான சிக்கல்களுக்கு தீர்வு கண்டுபிடிக்கும், உலகளாவிய போட்டியில் பங்கேற்று, சென்னையைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர், சாதனை படைத்துள்ளார். போட்டியில் முதலிடம் பிடித்த மாணவரை, அமெரிக்காவின் எம்.ஐ.டி., நிறுவனம் பாராட்டி, பரிசு வழங்கி உள்ளது. 

சென்னை அடுத்த சூரப்பட்டில் உள்ள வேலம்மாள் வித்யாஸ்ரம் பள்ளியில், 10ம் வகுப்பு படிப்பவர், அர்ஜுன். இணையதளம் வடிவமைப்பு, புதிய சாப்ட்வேர் கண்டுபிடிப்பு என, பல செயல்களில் ஆர்வம் உள்ளவர்.அமெரிக்காவின் முன்னணி கல்வி நிறுவனமான, மசாசூட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்.ஐ.டி.,), கடந்த ஆண்டு டிசம்பரில், கம்ப்யூட்டரில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வை கண்டுபிடிக்கும் போட்டியை, உலகளாவிய அளவில் நடத்தியது.இதன் முடிவை, சில தினங்களுக்கு முன், எம்.ஐ.டி., அறிவித்தது. அதில், முதல் இடத்தை பிடித்து, அர்ஜுன் சாதனை படைத்தார். மாணவரின் சாதனையை பாராட்டி, ஐந்து "நெக்சஸ் ஆண்டிராய்டு ஸ்மார்ட் போன்'களை, எம்.ஐ.டி., நிறுவனம் பரிசாக அறிவித்துள்ளது. இந்த வகை போன், இன்னும் இந்தியாவிற்கு வரவில்லை. இதே எம்.ஐ.டி., நிறுவனம், 2012ல் நடத்திய போட்டி ஒன்றிலும் பங்கேற்று, பள்ளி வாகனங்கள், எந்த பகுதியில் செல்கிறது என்பதை, பெற்றோர், வீட்டில் இருந்தபடியே அறியும் வகையில், நவீன தொழில்நுட்பம் கொண்ட ஆண்டிராய்டு போனை வடிவமைத்து, மாணவர் அர்ஜுன் சாதனை படைத்தார்.

நன்றி : தினமலர் 

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி