அதிக நேரம் பள்ளியில் மாணவர்கள்: சுவையா...சுமையா?மையா?

ஒரு பக்கம் இப்படி மூட்டை என்றால், இன்னொரு பக்கம், அதிக நேரம் பள்ளியில் மாணவர்கள் இருப்பதும் நம் நாட்டில் தான் அதிகம். இது நல்லதா, கெட்டதா என்று இன்னமும் முடிவு காண முடியாத கேள்வியாகவே உள்ளது. அதனால் விடிவு ஏற்படவில்லை.

ஓஇசிடி... அதாவது, ஆர்கனைசேஷன் ஃபார் எகனாமிக் கோவாப்ரேஷன் அண்டு டெவலப்மென்ட் கூட்டமைப்பு என்று சர்வதேச அமைப்பு உள்ளது. பொருளாதார ஒத்துழைப்பு, வளர்ச்சி பற்றி ஆராயும் அமைப்பு. அமெரிக்காவில் ஆரம்பித்து இந்தியா வரை 35 வளர்ந்த, வளரும் நாடுகள் இதன் அங்கம்.கல்வி தான் பொருளாதாரம், வளர்ச்சிக்கு எல்லாம் அடிப்படை. அதனால் அது பற்றி இந்த நாடுகளில் ஒரு ஆய்வை இந்த அமைப்பு மேற்கொண்டது. எந்த நாட்டில் அதிக நேரம் பள்ளியில் குழந்தைகள் இருக்க நேர்கிறது? என்பதில் ஆரம்பித்து, நியாயமான, அறிவுக்கு விருந்தாகும் அளவுக்கு உகந்த மணி நேரங்கள் எவ்வளவு என்பது வரை சர்வே எடுக்கப்பட்டது.

இந்தியாவை பொறுத்தவரை, 8வது படிக்கும் ஒரு மாணவன், சராசரியாக ஒரு மாதத்துக்கு 130 மணி நேரம் பள்ளியில் கழிக்கிறான் என்று தெரியவந்துள்ளது. இந்த அமைப்பில் உள்ள மற்ற நாடுகளை சேர்ந்த இதே வகுப்பு படிக்கும் மாணவர்களை விட, இந்திய மாணவன் அதிக நேரம் பள்ளியில் கழிக்கிறான்;அது மட்டுமல்ல, ஒரு மாதத்துக்கு சராசரியாக தொடக்கப் பள்ளி மாணவன், 20 நாட்கள் (ஆண்டுக்கு 220 நாட்கள்) தலா ஐந்து மணி நேரம் வகுப்பு நேரமாக கழிக்கிறான் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்தியாவை பொறுத்தவரை, பள்ளியில் எவ்வளவு வகுப்புகள் தேவை, அதற்கு எவ்வளவு மணிநேரம் ஒதுக்கலாம் என்பதில் இன்னமும் ஒரு முடிவுக்கு எந்த மாநிலமும் வரவில்லை. பல மாநிலங்களில் ஒவ்வொரு வகையில் பின்பற்றபப்டுகிறது. 

கல்வி உரிமை சட்டம் வந்தாகி விட்டது. ஆனால், அதில் உள்ள முக்கிய விஷயங்கள் கூட, அதிலும் மாணவர்களுக்கு, அறிவை பெருக்கும் வகையில் சொன்ன அம்சங்கள் பெரும்பாலான பள்ளிகளில், மாநிலங்களில் கடைபிடிக்கப்படவில்லை என்பதும் கசப்பான உண்மை. அதில் குறைந்தபட்ச நேரம் பற்றி கூட சொல்லப்பட்டுள்ளது. ஆனால், தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, ஆளுக்கு ஒரு முறையை பின்பற்றி வருகின்றன. எப்படியாவது தேர்வு ரேசில், பள்ளி முதலிடத்தில் வர வேண்டும்; மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதே ‘வர்த்தக’ குறிக்கோள்.சர்வேயில் கிடைத்த மேலும் சில தகவல்கள்...

* முதல் வகுப்பு ஆரம்பித்து ஐந்தாவது வரை சராசரியாக மாணவர்கள் ஆண்டுக்கு 220 நாள் பள்ளியில் நேரத்தை கழிக்கின்றனர்.

* அதாவது, வகுப்பு நேரம் மொத்தம் 1100 மணி நேரங்கள்.

* ஆறு முதல் எட்டு வரை வகுப்பு மாணவர்கள், 220 நாளில் 1100 மணி நேரங்கள் வகுப்பு பாடங்களை கவனிக்கின்றனர். 

* மற்ற நாடுகளில் இந்த இரண்டுமே மிகவும் குறைவு. முறையே 749, 873 மணி நேரங்கள் தான் இதே வகுப்பு படிக்கும் மாணவர்கள் கழிக்கின்றனர்.

* எல்கேஜி, யுகேஜி குழந்தைகள் கூட, மற்ற நாடுகளை விட, 51 மணி நேரம் அதிகம் பள்ளியில் செலவழிக்கின்றனர்.கைநிறைய சம்பாதிக்க தான் படிப்பு என்ற நிலை மாறும் போது தான் இதெல்லாம் மாறும். அது நடக்குமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி