ஏ.டி.எம்.-களில் பணம் எடுக்க கட்டணம் வசூலிப்பதா?ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க கட்டணம் வசூலிப்பது கேலிக் கூத்தானது என்றும பணம் எடுப்பதால் அதிக செலவாகிறது என வங்கிகள் உங்களிடம் கட்டணம் வசூல் செய்தால், நீங்கள் வங்கிக்கு போனால்கூட உங்களிடம் கட்டணம் வசூலிக்க நேரிடும் என்றும் ரிசர்வ் வங்கி துணை கவர்னர் தெரிவித்துள்ளார்.

தற்போது அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் 24 மணி நேரமும் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும் என்று பல்வேறு மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. இதன் காரணமாக வங்கிகளுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இதை ஈடுகட்டும் வகையில் எந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்தாலும், மாதம் ஒன்றுக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுக்கிறபோது அதற்கு கட்டணம் நிர்ணயிக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கியிடம் இந்திய வங்கிகள் சங்கம் கோரி உள்ளது.

இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கே.சி. சக்கரவர்த்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ”பணம் எடுப்பதற்கு, அதுவும் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதற்கு வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிப்பது என்பது மிகவும் கேலிக்கூத்தானது. இது ஒரு போதும் எங்கும் நடக்காது. பணம் எடுப்பதால் அதிக செலவாகிறது என வங்கிகள் உங்களிடம் கட்டணம் வசூல் செய்தால், நீங்கள் வங்கிக்கு போனால்கூட உங்களிடம் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்து விடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Ridiculous for banks to charge for withdrawals at own ATMs: KC Chakrabarty, RBI DG

Lashing out at the proposal from the Indian Banks’ Association to start charging customers for ATM withdrawals, Reserve Bank of India Deputy Governor KC Chakrabarty has sad that such a move on the part of banks would be ‘ridiculous’ and ‘illogical’.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி