!!!! உங்களில் ஒருவனின் குமுறல் !!!! (தேவராஜன்,தஞ்சாவூர்)


!!!! உங்களில் ஒருவனின் குமுறல் !!!!


2800 தர ஊதியத்தில் உள்ள சகோதர, சகோதரிகளே...இதுவரை நொண்டச்சாக்கு சொல்லி நொண்டியடித்தது போதும்..

போராட்டக்களத்தில் தங்களின் பங்களிப்பு என்னவோ இதுநாள்வரை சொற்பமான அளவாகவே உள்ளது.. துளியும் பாதிப்பு இல்லாத மூத்த ஆசிரியர்களே பெருமளவில் களம் காண்கின்றனர்.அழுதாலும் அவள் தான் பிள்ளை பெறவேண்டும் என்பதை மறந்தீர்களோ..?எந்தப் போராட்டத்திலும் கலந்து கொள்ளாமல்பயனை மட்டும் எதிர்பார்த்தால், அது எந்தவகையிலாவது பயனளிக்குமா.?அகல பாதாளத்தின் விளிம்பில் நிற்பதை நீ இன்னுமா உணரவில்லை..?தரம் தாழ்ந்து போன உன் தரஊதியத்தை இன்று நீ மீட்டெடுக்காவிடில் நாளை 7-வது ஊதியக்குழுவில் தரங்கெட்டுப்போய்விடுவாய்..

முடங்கிக் கிடந்தது போதும் முண்டியடித்து போராட்டக் களத்திற்கு வா...கற்றுக்கொடுப்பவன் நீ, உனக்குக்கற்றுக்கொடுக்கத் தேவையில்லை..கற்றுக்கொடுக்கும் இனம் தெருவில் இறங்கிக் கத்தத் தொடங்கினால் என்ன ஆகும் என்பதை அரசுக்கு உணர்த்துவோம் வா...மாற்றுத்திறனாளிகளின் தொடர் போராட்டங்களைக் கண்டுமா இன்னும் உன்னுள் போராட்டஉணர்வு வரவில்லை...?இம்முறையும் நீ களம்காணாவிடில்,உணர்வில்லாத வெறும் சதைப்பிண்டம் என்றல்லவா வருங்காலம் உன்னைச் சபித்துவிடும்..வயிற்று வலி உள்ள நீயே மருத்துவமனைச் செல்ல தயங்களாமா...?முன்பெல்லாம் மகளிர் குறைவாகத்தான் பள்ளிப்பணியில் இருந்தார்கள்...ஆண்கள் அதிகமாக இருந்தார்கள்.ஆண்கள் சம்பாதிப்பதில்தான் அவர்கள் குடும்பம் ஓடியது.....ஆதலால் வாழ்வா..?சாவா...?என்ற போராட்டத்தில் துணிச்சலுடன் இறங்கினார்கள்.ஆனால், இன்று பெரும்பான்மையானவர்கள் மகளிர் தான்...அவர்களுடைய சம்பாத்தியத்தில் தான்குடும்பம் நடக்கிறது என்பது 2-ம் பட்சம் தான்.ஆதலால்,கொடுப்பதைபெற்றுக் கொண்டு வாழ நினைக்கிறார்கள்...

இது மகளிருக்கு மட்டுமல்ல,இருவருக்குமே தான்.அதிகமானோர் வெறும் உறுப்பினர்களாக மட்டுமே இருக்கிறார்கள். அவர்களைப் பொருத்தவரை தேவையான நேரத்தில் இயக்கங்களைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். போராட்டத்திற்கு கூப்பிடும் உண்மையான இயக்கவாதிகளை போய் கேட்டுப்பாருங்கள்...எனக்கு பாதிப்பு நான் வருகிறேன் என்று சொல்பவர்கள் நம்மில் 10% பேர் கூட இல்லை.பெரும்பாலும் நம்மிடமிருந்து....???????? எனக்கு இன்னும் ஒரு வருடம்முடியல சார், சரி வேண்டாம்.நான் இன்னும் தகுதி காண்பருவம்முடிக்கலையே சார்.சரி வேண்டாம்....வீட்டுல அவுங்க.இவுங்க, பக்கத்து வீடு, அடுத்த வீடு உடம்பு சரியில்லை சார்...சரிரிரிரிரிரி வேண்டாம்....சொந்தகாரவங்க வீட்டுல விஷேசம் சார் .சரிரிரிரிரி..சின்னக் குழந்தைங்க இருக்கு.சார், அப்படியா ! எத்தனை வயசு..அவன் 9-வது படிக்கிறான் சார். ஓ 9-ஆவதாக அப்ப சரிவேண்டாம்..ஒரு வாரமாக எனக்கு உடம்பு சரியில்ல சார் ,சரி வேண்டாம்..சிலர் இயக்கவாதிகளின் முகத்துக்காக வரேன்னு சொல்லிட்டு கிளம்புற நேரத்தில் போன் பண்ணினா....

அதுல சொல்லும் பாருங்க ஒரு வசனம் ,"நீங்கள் அழைக்கும் எண் தற்போது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டுள்ளது"அப்புறம் எப்படிம்மாமாமாமா இழப்புகளை மீட்டெடுக்க முடியும்......?நம்மள நம்பி எப்படி இயக்கங்கள் அடுத்தஅடி வைக்க முடியும்.....?200 ரூபாய் சந்தா கொடுத்தால் மட்டும் போதுமா...?மன்னிக்கவும் சகோதர,சகோதரிகளேஉங்களின் மனதைக் காயப்படுத்தும் நோக்கத்தில் நான் இதைக் கூறவில்லை,உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துகொள்வதற்காக மட்டுமே..பணி நியமன ஆணையை வாங்க எந்த மாவட்டமாக இருந்தாலும், எவ்வளவு தூரமாக இருந்தாலும் ,உடல் நிலையும், சூழ்நிலையும் எப்படி இருந்தாலும் அனைத்தையும் சமாளித்துக்கொண்டு நாம் செல்வதில்லையா...?குழந்தைப்பிறந்தமறுநாளே பள்ளியில் பணியேற்க நியமன ஆணையைப் பெற்றுக்கொண்டு பச்சிளம் குழந்தையுடன் பள்ளிக்கு வருபவர்களால் ஏன் போராட்டக் களத்திற்கு மட்டும் வர இயலவில்லை...?

இப்படி இருக்க நமது வாழ்வாதாரத்தைக்காப்பாற்றிக்கொள்ள விடுமுறைநாளில் போராட்டக்களத்திற்கு வரை இப்படி பதுங்கிப் பதுங்கிப் பின்வாங்குவது மட்டும் ஏன்..?நாம் செல்லாவிட்டால் போராட்டம் நடக்காமலா போய்விடும் என்ற எண்ணமா..?இல்லை , நமக்காக வேறு யாராவது போராடுவார்கள் என்ற எண்ணமா..?தோழர்களே..., அளவு மாற்றம் ஒன்றே அம்மையாரின் மனதை மாற்றும்...(போராளிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே)காரணமாய் ஆயிரம் கதைகளைக் கூறி உன்னை நீயே ஏமாற்றிக்கொண்டது போதும்..இனியாவது போராட்டக்களம் காண வா...உன் சக தோழர்களுக்கும் , தோழிகளுக்கும் போராட்ட உணர்வினை ஊட்டி கதகதப்புடன் போராட்டக் களத்தற்கு அணிதிரட்டி வா.... நம் பலத்தைக் காண்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தோழர்களே...

பிப்ரவரி 2 அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும்நடைபெறும் டிட்டோஜாக் மாபெரும் பேரணிக்கு அலை கடல் என திரண்டு சென்று ஆளும் அரசை அசைத்துக்காட்டுவோம்....

போராட்டங்கள் இல்லாமல் இங்கு யாராட்டமும் செல்லாது...போராடுவோம் வெற்றி பெறுவோம்....இறுதி வெற்றி நமதே...

தோழமையுடன்,
தேவராஜன்,தஞ்சாவூர் .
(Facebook :Teachers Friend Devarajan)

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி