இந்தியர்கள் விசா பெறுவதில் சலுகை: மலேசிய அரசு அறிமுகம்


மும்பை, ஜன.6- இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்ற பின் மலேசியா வந்தால் அங்கு வந்தவுடன் அவர்கள் விசா பெற்றுக்கொள்ள எளிய வசதியை மலேசிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 

அதாவது சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நாட்டிற்கு சென்ற இந்தியர் ஒருவர், மலேசியா வந்தடையும்போது அவர் அந்த இரு நாடுகளில் அவர்கள் தங்கியிருந்த விசாவை காண்பித்த பின் இங்கு விசாவை எளிதாக பெற்றுக்கொள்ளலாம் என அந்நாட்டு அரசு குறிப்பிட்டுள்ளது. 

மலேசியாவிற்கு இந்தியர்கள் பெரும்பாலான அளவில் சுற்றுலா செல்வதால், அந்நாட்டு சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டு இம்முடிவை எடுத்தாக சுற்றுலா வளர்ச்சி கழக தலைவர் மனோகரன் பெரியசாமி கூறியுள்ளார். 

மலேசியாவிற்கு வரும் குடும்பம் மற்றும் தனிப்பட்ட நபர்கள் 100 டாலர் கட்டணத்தை செலுத்தி அங்குள்ள விமான நிலையங்களிலேயே விசாவை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி