தமிழகத்தில் முதன் முறையாக தேசிய புத்தக நிலையம் திறப்பு

தேசிய புத்தக நிறுவனம், தமிழகத்தில், முதன் முறையாக, சென்னையில் உள்ள கல்வித் துறை வளாகத்தில், புத்தக நிலையத்தை, நேற்று துவக்கியது. மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கீழ், தேசிய புத்தக நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம், தமிழகத்தில், முதன் முறையாக, தன் கிளையை திறந்துள்ளது. இதில், சி.பி.எஸ்.இ., பாட புத்தகங்கள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த புத்தகங்களும் கிடைக்கும். இந்த விழாவில், நிறுவனத்தின் தலைவர், சேது மாதவன் பேசுகையில், ""ஐதராபாத், கவுகாத்தி, பாட்னா, அகர்தலா நகரங்களிலும், விரைவில், தேசிய புத்தக நிலையம் திறக்கப்படும். உலக புத்தக கண்காட்சி, வரும், 15 முதல், 23ம் தேதி வரை, டில்லியில் நடக்கிறது. இதில், 30 நாடுகள் பங்கேற்கின்றன. 1,700 அரங்குகள் அமைக்கப்படுகின்றன,'' என, தெரிவித்தார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி