தாவரவியல் - பூஞ்சைகள்

 பூஞ்சைகள் மிகப் பெரிய உயிரினக் குழுக்களில் ஒன்று.
* வளமற்ற மண்ணும், தாவர, விலங்கு கழிவுகளும் இவற்றின் தாக்கத்தால் மாற்றமடைந்து நிலத்துடன் சேர்வதால் நிலவளம் அதிகரிக்கிறது எனலாம்.
* பூமியில் எல்லா வகை சுற்றுச்சுழல்களிலும் பூஞ்சைகள் காணப்படுகின்றன. இவை இருண்ட ஈரப்பசை நிரம்பிய இடங்களிலும் கனிம ஊட்டப்பொருட்கள் நிறைந்த வளர்தளங்களிலும் வளர்கின்றன.
* பூஞ்சைகளைப் பற்றிய தாவரவியல் பிரிவிற்கு மைகாலஜி (Mycology) என்று பெயர்
* பூஞ்சைகள் பச்சயமற்ற தாலோபைட்டு வகையைச் சார்ந்தவை. இப்பூஞ்சைகளினால் ஏற்படும் வேதிவினை மாற்றங்கள் சுற்றுப்புறத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
* விட்டேக்கரின் ஐந்துலக வகைப்பாட்டில் பூஞ்சைகள் உலகம் மற்றும் தாவர உலகம் என்ற இரண்டு தனி உலகங்களாக வகைப்பட்டுள்ளது.
* பொதுவாக பூஞ்சைகள் பல செல்களால் ஆன யூகேரியோட்டுகள் ஆகும்.
* பூஞ்சைகள் மட்குண்ணிகள், ஒட்டுண்ணிகள் என இரண்டு வகையான வேறுபட்ட ஊட்ட முறைகளை கொண்டுள்ளது.
* மட்குண்ணிகள் இறந்த மற்றும் அழுகிய அங்கக் பொருள்களின் மீது வாழ்கின்றன. எ.கா. ரைசோபஸ், அகாரிகஸ்
* பூஞ்சைகளின் உடலம் மைசீலியம் என்று அழைக்கப்படுகிறது.
* மைசீலியங்கள் கிளைத்த மெல்லிய இழைகளால் ஆனவை. இந்த இழைகளுக்கு ஹைபாக்கள் என்று பெயர்.
* பூஞ்சைகளின் செல் சுவர் கைட்டின் மற்றும் பூஞ்சை செல்லுலோஸினால் ஆனது.
* மைசீலியம் வளரக்கூடிய தளத்திற்கு வளர்தளம் என்று பெயர்.
* மைசீலியமானது மெல்லிய இழைகள் போன்ற ஹைபாக்களால் ஆனது.
* ஈஸ்ட்டு போன்ற பூஞ்சைகள் ஒரு செல் உயிரினங்களாகும்
* வண்ணான் படை அல்லது தேமல் போன்றவை பூஞ்சைகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களாகும். சில பூஞ்சைகள் மரப்பட்டையில் வளர்கின்றன.
* மரக்கட்டையின் மீது வளர்வது சைலோபில்லஸ் அல்லது மரக்கட்டை பூஞ்சையாகும்.
* முடி அல்லது மாட்டுக் கொம்பு போன்ற பொருளின் மீது வளர்பவை கெராட்டினோபில்லஸ் அல்லது கெரடின் பூஞ்சைகள் எனப்படும்.
* சில பூஞ்சைகள் உயர்நிலைத் தாவரங்களின் வேர்களோடு கூட்டுயிரியாக வளர்கின்றன. இந்த வகை வேர்களுக்கு மைகோரைசா என்று பெயர்.
பூஞ்சைகளின் தனிப் பண்புகள்:
* பூஞ்சையின் செல்களுக்கு செல் சுவர் உண்டு. இவை கைட்டின் எனப்படும் அசிட்டைல் குளுக்கோசமைன் அலகுகளால் ஆன ஒரு பாலிமரினால் ஆனது. இது ஒரு மியூக்கோ பாலிசாக்கரைடு வகையைச் சார்ந்தது.
* பூஞ்சைகளில் பச்சையம் இல்லை. எனவே இவை பிற ஊட்டமுறையைச் சார்ந்தவை.
* பூஞ்சையில் சேமிப்புப் பொருள் தரசம்(ஸ்டார்ச்) கிடையாது. தரத்திற்கு பதிலாக சேமிப்பு பொருளாக எண்ணெய் மற்றும் கிளைக்கோஜன் உள்ளது.
பூஞ்சைகளின் உடல் அமைப்பு:
* பூஞ்சைகள் நன்கு கிளைத்து மெல்லிய நூல் வடிவ ஹைஃபாக்கள் எனப்படும் இலைகளால் ஆனது. ஹைஃபாக்கள் அனைத்தும் சேர்ந்து மைசீலியம் என்று அழைக்கப்படுகிறது.
* ஹைஃபாக்களின் இடையில் செப்டம் எனப்படும் குறுக்குச் சுவர்களுடனோ அல்லது இல்லாமலோ பூஞ்சைகள் காணப்படலாம்.
* குறுக்குச் சுவர் அற்ற ஹைஃபாக்களில் பல நியூக்ளியஸ்கள் உள்ளன. இதற்கு சீனோசைட்டிக் என்று பெயர்.
பூஞ்சைகளின் உணவூட்ட முறை:
* பூஞ்சைகளிள் பிற ஊட்டமுறையைக் கொண்டவை. தமது உடலத்துக்கு வெளியே உள்ள ஊட்டப் பொருட்களை உறிஞ்சி எடுத்துக் கொள்கிறது.
* எனவே பூஞ்சையில் உணவு செறித்தல் செல்லுக்கு வெளியே உள்ள நொதிகளின் உதவியால் செல்லுக்கு வெளியில் நடைபெறுகிறது. இந்த அம்சம் ஒர் வித்தியாசமான அம்சமாகும்.
* பூஞ்சைகள் தனது ஊட்டத்தை மட்குண்ணிகளாகவோ(Decomposers), ஒட்டுண்ணிகளாகவோ (Parasite) அல்லது கூட்டுயிர்களாகவோ (Symbionts) பெறுகின்றன.
* பூஞ்சைகள் கட்டாய ஒட்டுண்ணிக்ள் ஊடுருவவும், உறிஞ்சுவதற்கும் சில சிறப்பு அமைப்புக்களை உருவாக்குகின்றன. இவை ஹாஸ்டோரியாக்கள் எனப்படுகின்றன.
* ஹாஸ்டோரியாக்கள் என்பவை ஹைஃபாக்களின் மாறுபட்ட வளர்ச்சியாகும்.
பூஞ்சைகளின் கூட்டுயிர் வாழ்க்கை:
* பூஞ்சைகளின் இரு முக்கியக் கூட்டுயிர் வாழ்க்கையில் ஈடுபடுகின்றன. அவை: 1.லைக்கன்கள் 2. மைக்கோரைசாக்கள்.
* ஆல்காக்களுக்கும், பூஞ்சைகளுக்கும் இடையே காணப்படும் கூட்டுயிர் வாழ்க்கை லைக்கன்கள் ஆகும்.
* லைக்கன்கள் வகையில் காணப்படும் ஆல்கா, பச்சை ஆல்கா அல்லது நீலப்பசும் ஆல்கா, பூஞ்சைகளில் ஆஸ்கோமைசீட்ஸ் அல்லது பெசிடியோமைசீட்ஸ் வகுப்பைச் சார்ந்த பூஞ்சைகள் கூட்டுயிரி வாழ்க்கையை மேற்கொள்ளும்.
* பூஞ்சைகளுக்கும், சில உயர் தாவர வேர்களுக்கும் இடையே காணப்படும் கூட்டுயிர் வாழ்க்கையே மைக்கோரைசாக்கள் எனப்படும்.
* இரு வகையான மைக்கோ ரைசாக்கள் காணப்படுகின்றன. 1. எக்டோடிராஃபிக் மைக்கோ ரைசாக்கள் 2. எண்டோடிராஃபிக் மைக்கோரைசாக்கள்.
* மரங்களிலிருந்து பூஞ்சைகள் கார்போ ஹைட்ரேட்டையும், வைட்டமின்களையும் பெறுகின்றன. அதற்குப் பதிலாக மண்ணின் மட்கில் காணப்படும் புரதங்களை அமினோ அமிலங்களாக பூஞ்சைகள் சிதைக்கின்றன. இவை எளிதாகத் தாவரங்களால் உறிஞ்சப்படுகின்றன.
பூஞ்சைகளின் வகைப்பாடு:
* ஆல்காக்களுக்கு இணையான ஒரு வகுப்பாக கருதப்பட்டு தாலோஃபைட்டா என்ற பிரிவின் கீழ் தாவர உலகில் வகைப்படுத்தப்பட்டன.
* வாஸ்குலார் திசுக்களற்ற வேர், தண்டு, இலை என்று பிரித்தறிய முடியாத உடலம் தாலஸ் ஆகும்.
* பூஞ்சைகள் மிக்சோமைக்கோட்டா, யூமைக்கோட்டா என இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
* மிக்சோமைக்கோட்டாவிற்கு எடுத்துக்காட்டு ஸ்லைம் மோல்டுகள்.
* யூமைக்கேோட்டா என்ற பிரிவின் கீழ் ஐந்து துணைப் பிரிவுகள் உள்ளன. அவை: 1. மாஸ்டிகோ மைக்கோட்டினா 2. சைகோ மைக்கோட்டினா 3. ஆஸ்கோ மைகோட்டினா 4. பெசிடியோ மைசீட்டுகள் 5. டியூட்ரோ மைசீட்டுகள் ஆகியன.
* கருப்பு ரொட்டிக் காளான்கள் என்று அழைக்கப்படும் ரைசோபஸ் மற்றும் மியூக்கர், சைகோ மைகோட்டினா வகுப்பைச் சார்ந்தவை.
* மியூக்கர் ஒரு மட்குண்ணிப் பூஞ்சையாகும். இது பொதுவாக ஊசிக்காளான் என்று அழைக்கப்படுகிறது. கருப்பு ரொட்டிக் காளான் என்றும் இதை அழைப்பதுண்டு. இப்பேரினத்தில் 50 சிற்றினங்கள் உள்ளன.
* மியூக்கர் சைகோ மைசீட்ஸ் வகுப்பைச் சேர்ந்தது. மியூக்கரின் ஒய்வு நிலையிலுள்ள ஸ்போர்கள் கிளாமிடோஸ்போர்கள் எனப்படும்.
Source : http://mysapost.blogspot.in/

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி