புதுடில்லி: டில்லிக்கு முழு மாநில அந்தஸ்து அளிக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. டில்லி காவல்துறையை மாநில அரசு வசம் அளிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தர்ணா போராட்டமும் நடத்தினார். இந்நிலையில், டில்லிக்கு முழு மாநில அந்தஸ்து அளிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, டில்லி காவல்துறை தொடர்ந்து மத்திய அரசு வசமே இருக்கும்.