இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் டெக்னீசியன் பணி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின்(ISRO) கீழ் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் செயல்பட்டு வரும் சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் காலியாக டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Technician-B (Fitter, Plumber, Diesel Mechanic, Refrigeration @ Airconditioning, Welder, Pumb Operator-Cum-Mechanic, Electrical, Electronic Mechanic, Chemical)பணி: Draughtsman(civil, Mechanical)

கல்வித்தகுதி:பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 10.01.2014 தேதியின்படி 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.5,200-20,200 + தர ஊதியம் ரூ.2,000 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, துறைவாரியான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.01.2014

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Administrative Officer, Recruitment Section, Satish Dhawan Space Centre Ahar, Sriharikota-524124, Sri Potti Sriramulu Nellore District, Andharapradesh.

மேலும் பிரிவு வாரியான காலியிடங்கள், விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.shar.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி