குடும்ப அட்டைகளுக்கு பதிலாக விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப் படும் என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ்.

குடும்ப அட்டைகளுக்கு பதிலாக விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப் படும் என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.மாவட்ட வழங்கல் அலுவலர் களுக்கான மாநில கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில்  தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச்சேர்ந்த வழங்கல் அலுவலர்கள் பங்கேற்றனர்.இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் காமராஜ் பேசியதாவது:தமிழக அரசின் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளின் மூலம் இதுவரை 2,775 டன் காய்கறிகள் விற்பனை செய்யப் பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு 8.17 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளன. 

இந்த அங்காடி களின் வேலை நேரம், விடுமுறை நாட்கள், ஊழியர்களின் பணி நேரம், புகார் சம்பந்தப்பட்ட தொலை பேசி எண் போன்றவற்றை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர் கோரும் பொருட்களை மட்டுமே வழங்க வேண்டும். தேவையற்ற பொருட்களை வாங்கச் சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது. கடந்த 1.06.2011 முதல் 31.12.2013 வரை 8 லட்சத்து 83 ஆயிரம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.இந்த காலகட்டத்தில் 2 லட்சத்து 54 ஆயிரம் போலி குடும்ப அட்டை கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் குடும்ப அட்டை கோரி விண்ணப்பிப்பவர்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு அடுத்த 60 நாட்களுக்குள் குடும்ப அட்டைகள் வழங்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் குடும்ப அட்டைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கும் முறை விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது. அதற்கான பயோ-மெட்ரிக் கணக்கெடுப்புப் பணிகளில் மாவட்ட அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும். அரசின் திட்டங்கள் பயனாளிகளுக்கு உரிய வகையில் சென்றடையும் வண்ணம் உணவு மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி