ஸ்மார்ட் போன் - பாதுகாப்பு..!

ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து, விரும்பிய மாடல்களின் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் வாங்கும் நண்பர்கள் ஆண்ட்ராய்ட் போன்களின் பாதுகாப்பு குறித்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்களா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.   

ஒரு ஆர்வத்தில் ஸ்மார்ட் போன்களை (Smartphone) வாங்கிவிட்டு, அதைப் பயன்படுத்துவதிலேயே முழுநேரத்தையும் செலவிடுகிறார்கள்.  குறிப்பாக சொல்வதெனில் பாதுகாப்பு குறித்த விசயங்களில் (Smart Phone Security) அதிக அக்கறை செலுத்துவதில்லை.
protech smartphone from theft-useful information

அதிக விலைக்கொடுத்து வாங்கிய மொபைல் திருடு போனாலோ அல்லது தொலைந்துபோகும்போது தான் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தோன்றுகிறது. இது வருந்ததக்கது. (நண்பர் ஒருவர் தனது விலையுயர்ந்த மொபைலை தொலைத்துவிட்டு புலம்பியதன் விளைவே இப்பதிவு)

  • இன்றைய பதிவில் அதிகளவு விலை கொடுத்து வாங்கிய ஆண்ட்ராய்ட் மொபைல் பாதுகாக்கும் வழிமுறைகள் என்னென்ன?
  • தொலைந்து போன ஆண்ட்ராய்ட் போனை மீட்பது எப்படி?
  • ஆண்ட்ராய்ட் போன் திருடுபோனதும் செய்ய வேண்டிய முதற்கட்ட நடவடிக்கைகள் என்ன?
  • ஆண்ட்ராய்ட் போன்களுக்கு இன்ஸ்சூரன்சும் பெறும் வழிமுறைகளும்

ஆகியவைகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். 

ஆண்ட்ராய் போன் வாங்கியதும் செய்ய வேண்டியது: 


ஆண்ட்ராய்ட் போனில் உள்ள பாதுகாப்பு முறைகளை அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும். நீங்கள் வாங்கும் மொபைல் ஷாப்பில் உள்ளவர்களே  இந்த வசதிகளை உங்களுக்கு அங்கேயே ஏற்படுத்திக்கொடுப்பார்கள். அல்லது அருகிலுள்ள சர்வீஸ் சென்டர்களை (Android Mobile Service Center) நீங்கள் அணுகி பாதுகாப்பு வழிமுறைகளை ஏற்படுத்திக்கொள்ளலாம். 

PIN NUMBER, PATTERN LOCK


மொபைலை வெளி நபர்கள் யாரும் அணுகாத வகையில் ஆண்ட்ராய்ட் மொபைலை பூட்ட  பின் நம்பர், பேட்டர்ன் லாக் போன்ற வசதிகளைப் பயன்படுத்தலாம். இதனால் உங்களைத் தவிர மற்றவர்கள் மொபைலை அணுக முடியாது. 

MOBILE TRACKING வசதி: 


இந்த வசதியின் மூலம் செயற்படுத்துவதன் மூலம் உங்களுடைய சிம்கார்டை நீக்கிவிட்டு வேறு சிம்கார்ட்டை ஆண்ட்ராய்ட் போனில் பயன்படுத்தும்போது தானாகவே புதியதாக இணைக்கப்பட்ட சிம்கார்ட் பற்றிய தகவல்களை எஸ்.எம்.எஸ். (SMS) உங்கள் நண்பர்கள், அல்லது உங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் மொபைல் நம்பர்களுக்கு தகவல் அனுப்பும்படி செட் செய்யலாம். இது ஆண்ட்ராய்ட் போனை திருடியவர்களைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள பயன்படும். 

Mobile Insurance (மொபைல் இன்ஸ்யூரன்ஸ்) வசதி: 


இந்த வசதியின் மூலம் மொபைல் திருடு போனாலோ, அல்லது உடைந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்தாலோ, உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலின் விலைமதிப்பிற்கு தகுந்த தொகையை இன்சூரன்ஸ் மூலம் பெற்றிட முடியும். இதற்கு நீங்கள் கண்டிப்பாக உங்களுடைய மொபைலை இன்சூரன்ஸ் (Mobile Insurance) செய்திருக்க வேண்டும். அதனால் முதலில் விலையுயர்ந்த மொபைல் வாங்கியவுடனேயே இன்ஸ்யூரன்ஸ் செய்வது நல்லது. 


ஆண்ட்ராய்ட் போன் தொலைந்து போனதும் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: 


முதலில் உங்களுடைய மொபைல் தொலைந்து போனதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும். எதை வைத்து வழங்குவது? அதற்கு நீங்கள் பயன்படுத்தும் மொபைல் சர்வீஸ் புரோவைடர் (Aircel, Airtel, Reliance போன்றவை) அலுவலகத்தை அணுகி, மொபைல் போன் தொலைந்துவிட்டது. அதனால் என்னுடைய சிம்கார்ட்டை பிளாக் செயலிழக்க செய்யுங்கள் என வேண்டுகோள் விடுக்க வேண்டும். 

நீங்கள்தான் அந்த சிம்கார்ட்டுக்கு சொந்தக்காரர் என்பதை நிரூபிக்க, புகைப்படம் அடையாள அட்டை, நீங்கள் பயன்படுத்திய மொபைல் நம்பர், கடைசியாக நீங்கள் அழைத்த மொபைல் எண், நீங்கள் அடிக்கடி அழைத்துப் பேசும் மொபைல் எண், போன்ற அவர்கள் கேட்கும் தகவல்களைக் கொடுத்து, மாற்று சிம்கார்ட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும். கூடவே மொபைல் தொலைந்ததால் மாற்று சிம்கார்ட் பெற்றதற்கான  ஆதார நகலையும் அவர்களிடம் பெற்றுக்கொள்ள வேண்டும். 

பிறகு நீங்கள் ஆண்ட்ராய்ட் போன் வாங்கியதற்கான பில், டூப்ளிகேட் சிம் வாங்கியதற்குண்டான ஆதாரம் ஆகியவைற்றைக் கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் செல்போன் காணாமல் போய்விட்டதாக புகார் அளிக்கலாம். 

நீங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தொலைந்துபோன அல்லது திருடு போன மொபைலை மீட்க காவல் துறை ஈடுபடும். 

குறிப்பிட்ட நாட்களுக்குள் தொலைந்துபோன ஆண்ட்ராய்ட் செல்போனை (Android Mobile) கண்டுபிடித்து உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. அல்லது கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில் அவர்கள் ஆண்ட்ராய்ட் போனை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்கான சான்றை கொடுப்பார்கள். 

ஆண்ட்ராய்ட் போனுக்கான இன்சூரன்ஸ் தொகையை பெறுவது எப்படி? 


மேற்சொன்ன வழிமுறைகளை கையாண்டுவிட்டு, இறுதியாக உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனை மீட்க முடியாத சூழலில் நீங்கள்  மேற்சொன்ன 

1. புதிய டூப்ளிகேட் சிம் வாங்கியதற்கான ஆதாரம் (Evidence of Duplicate sim)
2. காவல்துறையில் புகார் அளித்து, அவர்கள் கொடுத்த இறுதி ஆதாரம் (Evidence of Report)
3. மொபைல் வாங்கியதற்கான பில்(Mobile Bill)
4. மொபைல் இன்சூரன்ஸ் செய்ததற்கான ஆவணம் (Documents of Mobile insurance)

ஆகியவற்றுடன் நீங்கள் காப்பீடு செய்த நிறுவனத்தை நேரடியாக அணுகி மொபைலுக்கான காப்பீட்டைப் பெற்றுகொள்ள முடியும். 

நன்றி :  தங்கம்பழனி

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி