புதுடில்லி: நடிகர் கமல்ஹாசன் , கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் உள்ளிட்ட பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தோருக்கு மத்திய அரசு, ஆண்டு தோறும் பத்ம விருதுகள் வழங்குகிறது. இந்தாண்டுக்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
பத்ம விபூஷண்விருது: மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் முன்னாள் தலைவர் மஷேல்கர் மற்றும் யோகா குரு பி கே எஸ் ஐயங்கார் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம பூஷண் விருது: நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, கடம் வித்துவான் வினாயக்ராம், கர்நாடக இசைக்கலைஞர் பர்வீன் சுல்தானா, நீதிபதி தல்வீர் பண்டாரி, எழுத்தாளர் ரஷ்கின்பாண்ட் மற்றும் அனிதா தேசாய், டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், நீதிபதி ஜே எஸ் வர்மா, பாட்மின்டர் வீராங்கனை புல்லேலா கோபிசந்த் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம ஸ்ரீ விருது: நரம்பியல் நிபுணர் சுனில் பரதன், புற்றுநோய் நிபுணர் ராஜேஸ்குரோவர், ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை நிபுணர் தேனும்கல் போலோஸ் ஜேக்கப், நடிகை வித்யா பாலன், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல், இந்திய மகளிர் அணி முன்னாள்கேப்டன் அஞ்சும் சோப்ரா, கபடி வீரர் சுனில் தபாஸ், மலையேறும் வீரர் தரம்சக்து, போனிபேஸ் பிரபு, மலையேறும் வீராங்கனை மம்தா சோதா, கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், தமிழ் சினிமா ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையை சேர்ந்த அஜய்குமார் பரிடா, தொழில்துறையை சேர்ந்த மல்லிகா ஸ்ரீனிவாசன், மருத்துவத்துறையில் தமிழகத்தை சேர்ந்த தேனும்கல் போலோஸ்ஜேக்கப், யுனானி மருத்துவத்துறையை சேர்ந்த ஹக்கீம் சையத் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதுகளை ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்குவார்.