இந்தியாவில் விபத்துகளில் தமிழகம் முதலிடம்


இந்தியாவில் 2013ம் ஆண்டு, 4 லட்சத்து 40 ஆயிரம் விபத்துகள் நடந்ததில், 1 லட்சத்து 39 ஆயிரம் பேர் பலியாகினர். தமிழகத்தில் மட்டும் 16,175 பேர் இறந்துள்ளனர். விபத்துகளில், மாநில அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

திண்டுக்கல்லில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு கருத்தரங்கில், எலும்பு முறிவு தலைமை டாக்டர் ஜேம்ஸ் சுந்தர் சிங் பேசியதாவது: 

இந்தியாவில், கொள்ளை நோய், பெரிய அம்மை போன்றவை ஒழிக்கப்பட்டுள்ளது. நோய்களால் இறப்பவர்களை விட, விபத்துகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2013ல், இந்தியாவில் 4 லட்சத்து 40 ஆயிரத்து 42 விபத்துகள் நடந்துள்ளன. இதில், 1 லட்சத்து 39 ஆயிரத்து 91 பேர் இறந்துள்ளனர். விபத்துகளில், தமிழகம் முதலிடம் வகிக்கிறது. சென்ற ஆண்டில், தமிழகத்தில் நடந்த 67 ஆயிரத்து 757 விபத்துகளில், 16 ஆயிரத்து 175 பேர் பலியாகியுள்ளனர். இரண்டாவது இடத்தில் உத்தர பிரதேச மாநிலம் உள்ளது. மூன்றாவது இடத்தில் ஆந்திரா உள்ளது. இதில் 75 சதவீதம் விபத்துகள், இரவு, 7:00 முதல், அதிகாலை 6:00 மணிக்குள் நடந்துள்ளன. குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, மொபைல் போன் பேசிக்கொண்டும், தூக்கம் இல்லாமலும் வாகனங்கள் ஓட்டுவது, வாகனங்களின் பெருக்கம், தரமான சாலைகள் இல்லாதது, விபத்துகளுக்கு காரணமாக உள்ளது. 16 முதல், 36 வயதுக்குட்பட்டவர்களே விபத்தில் இறக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி