காவிரியாறு ஓடையானது ; ஆற்றுக்குள் விவசாயம்

கரை புரண்டு ஓடிய காவிரியாறு, வறட்சியால், தற்போது, ஓடையாக மாறியுள்ளது. இதனால், விவசாயிகள், ஆற்றுக்குள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த ஆக., மாதம், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், பருவமழை தீவிரம் அடைந்ததால், மேட்டூர் அணைக்கு, வினாடிக்கு, 1.30 லட்சம் கனஅடி நீர் வந்தது. அப்போது, ஒகேனக்கல் முதல், மேட்டூர் அணை வரையிலான, காவிரியாற்றின் இருகரைகளையும் தொட்டவாறு, வெள்ளம் கரைபுரண்டு சென்றது. தற்போது, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், கடும் வறட்சி நீடிப்பதால், ஒரு வாரமாக, மேட்டூர் அணைக்கு, மிக குறைவாகவே நீர் வரத்து உள்ளது. நேற்று, அணைக்கு, வினாடிக்கு, 136 கனஅடி, நீர் வந்தது. அதனால், ஓடை போல சுருங்கியுள்ள, காவிரியாற்றுக்குள், தமிழக எல்லைப்பகுதியில் உள்ள, சில கிராமப் பகுதி விவசாயிகள், சோளம், எள், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை, சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், டெல்டா பாசனத்துக்கு, தொடர்ச்சியாக, நீர் திறக்கப்பட்டதால், கடந்த டிச., 1ம் தேதி, 85 அடியாக இருந்த, மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று, 52 அடியாக சரிந்ததுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி