1. உங்கள் சிகிச்சை முறையில் உணவுக்கட்டுப்பாடு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிக அவசியமாகும். உங்கள் குடும்பத்திலுள்ள மற்றவர்களின் உணவைப் போலவே உங்கள் உணவும் அமைந்து இருக்கலாம்.
3. நீரழிவால் பாதிக்கப்பட்டவர்கள் அரிசி உணவைத் தவிர்த்து கோதுமை, கேழ்விரகு போன்ற உணவு வகைகளையே உண்ண வேண்டும். என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. நீரழிவால் பாதிக்கப்பட்டவர்கள் அரிசி, கோதுமை, பார்லி, போன்ற எல்லா வகையான தானியங்களையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். எந்த வகையான தானியம் உட்கொள்கிறோம் என்பதைவிட எந்த அளவிற்கு உட்கொள்கிறோம் என்பதை முக்கியமானதாகும்.
4. புரதசத்து அடங்கியுள்ள முளைவிட்ட கடலை, பச்சை பயிறு, முழுக்கடலை, காராமணி, மொச்சை, பட்டாணி, போன்றவைகளை உணவில் அதிகம் சேர்ந்துக் கொள்ள வேண்டும்.
5. உணவு தாளிக்கும் போதும், பொறிக்கும் போதும் அனுமதிக்கப்பட்ட எண்ணெய் அளவையே உபயோகிக்க வேண்டும். நல்லெண்ணேய், சபோலா, சன்பிளவர். ரீபைண்ட் எண்ணெய் போன்ற தாவர எண்ணெய் வகைகளை உபயோகிக்கலாம்.
6. சமைக்கும் போது, குறைந்த அளவு உப்பையே உபயோகிக்க வேண்டும் சாப்பிடும்போது மீண்டும் உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். (இருதயம் மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளவர் கள் மருத்துவரின் ஆலோசனைப்படி உப்பு சேர்த்துக் கொள்ளவும்).
7. ஒரு நாளைக்கு 8-10 டம்ளர் வரை நீரை கண்டிப்பாக அருந்த வேண்டும். சாப்பிடும் போது நீர் பருகுவதை தவிர்த்தல் நலம். (சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு நீரின் அளவு - மருத்துவரின் ஆலோசனைப்படி அருந்த வேண்டும்)
8. நார்ச்சத்து நிறைந்த முழு தானியங்களையும், கீரை, காய்கறி வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை இரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தை குறைக்கவும், மலச்சிக்கலைத் தவிர்க்கவும், பசியைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
9. இடைப்பட்ட நேரத்தில் உண்ணக்கூடிய உணவு வகைகள்
மோர், தக்காளிச்சாறு, சூப், முட்டைக்கோஸ், முள்ளங்கி, சாலட், போன்றவைகளை கூடுமான வரையில் நிறைய சேர்த்துக் கொள்ளலாம்.
10. சிறந்த உணவுக்கட்டுப்பாடு முறைகளை பின்பற்றினால்
அ. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பட்டிற்குள் வைத்திருக்கலாம்.
ஆ. இந்நோயினால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கவும். (விழித்திரை பாதிப்பு, நரம்பு மண்டல சிறுநீரக மற்றும் இருதய பாதிப்பு)
இ. உட்கொள்ளும் மருந்தின் அளவைக் குறைக்கலாம்.
ஈ. உடல் எடையை சீரான முறையில் வைத்துக் கொள்ளலாம்.
உ. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும் பொழுது ஏற்படும் அறிகுறிகள்
அதிக பசி வியர்வை பெருகுவது உடல் நடுக்கம்
படபடப்பு பலவீனம் தளர்ச்சி
மயக்கம் பார்வை மங்குதல் மனநிலை மாற்றம்
இந்த நிலைக்கான அறிகுறிகள் மிகவும் கடுமையாக இருந்தாலும், இதனைத் தொடர்ந்து மயக்கம்மும், சுயநினைவற்ற நிலைமையும் தோன்றும்.
இன்சுலின் சார்ந்த இளம் வயதினர்களுக்கு இழுப்பு வருவது அறிகுறிகளில் ஒன்றாகும்.
மேற்கண்ட அறிகுறிகள் தோன்றும் பொழுது நீரழிவு நோயாளிகள் சர்க்கரையோ அல்லது குளுக்கோஸோ எடுத்துக் கொள்ள வேண்டும். பாதிப்பு அதிகமாகி சுயநினைவு இன்றி இருப்பின் டாக்டரிடம் காண்பித்து உடல் வழி செலுத்தும் குளுக்கோஸ் தரப்படுவதால் சில நிமிடங்களில் சயநினைவு வர வழிவகுக்கும்.
11. தினமும் மருத்துவர் கூறும் வகையில் உடற்பயிற்சி செய்தல் அல்லது நடத்தல் அவசியம்.
(மாற்று மருத்துவம் ஜூலை 2010 இதழில் வெளியானது)
— with Santhosh Kumar and Anegan Veera.