மாணவர்கள் சிகிச்சை செலவு அரசு ஏற்க வலியுறுத்தல்

விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர்களின் சிகிச்சை செலவை அரசும், பல்கலைக் கழகமும் ஏற்க வேண்டும் என, மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து சங்க தலைவர் பாலசுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:

பள்ளி கல்லூரிகளுக்கு, தனியாரால் இயக்கப்பட்டு வரும் பஸ்களில் பல, 15 ஆண்டு காலம் உபயோகப்படுத்தப்பட்டவை. டில்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பயன்படுத்தப்பட்ட பஸ்கள், பள்ளி கல்லூரிகளுக்கு பயன்படுத்தப்படுவதில்லை. இந்த விஷயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

பொம்மையார்பாளையத்தில் நடந்த விபத்தில் காயமடைந்த மணவர்களின் அனைத்து மருத்துவ செலவையும் அரசும், பல்கலைக்கழகமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். படுகாயமடைந்த மாணவர்களுக்கு சென்னையில் உள்ள உயர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி