குவைத்தில் வேலைவாய்ப்பு: தமிழக அரசு நிறுவனம் அறிவிப்பு.

சிவில், டெலிகாம் இன்ஜினீயர்களுக்கு குவைத்தில் வேலைவாய்ப்பு குறித்து தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்திய அரசு தொலைதொடர்புத் துறையின் குவைத் நாட்டு திட்டப் பணிகளுக்கு, தொலைதொடர்புத் துறையில் கட்டுமான பணிக்கு சிவில் இன்ஜினீயர்கள், டெலிகாம் இன்ஜினீயர்கள், எச்.எஸ்.இ. நடைமுறைகள் அறிந்த டெலிகாம் சிவில் இன்ஜினீயர்கள், கேபிள் பொருத்துனர்கள், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள், ஆட்டோ காட் ஆபரேட்டர்கள்,கொத்தனார்கள், கார்பென்டர்கள், ஸ்கில்டு லேபர்கள், குவைத் ஓட்டுநர் உரிமம் பெற்ற ஊர்தி ஒருங்கிணைப்பாளர்கள், ஊர்தி பழுது பார்ப்பவர்கள், லகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள், சமையலர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு தகுதி, அனுபவத்துக்கு ஏற்ற ஊதியத்துடன், இலவச விசா,விமான டிக்கெட், இருப்பிடம் மற்றும் இதர சலுகைகள் வேலையளிப்போரால் வழங்கப்படும்.


விண்ணப்பிப்பது எப்படி?

மேற்கண்ட பணிகளுக்கு விருப்பமும் தகுதியும் இருப்பின் தங்களது சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றுடன் ஒரு புகைப்படத்தை omcresum@gmail.com என்ற இமெயில் முகவரி மூலமாக அல்லது, எண்.42, ஆலந்தூர் சாலை, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை -32 என்ற முகவரியிலுள்ளதமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்கள் அறிய 044-22502267, 22505886 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். மேலும் தகவல்களை www.omcmanpower.com என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி