இளநிலை பயிற்சி அலுவலர் பணி: பதிவு மூப்பு விபரம் வெளியீடு.


பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை பயிற்சி அலுவலர் பணிகளுக்கான பதிவுமூப்பு விபரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மகாராணி கூறியதாவது: டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ., தகுதியுள்ள இளநிலை பயிற்சி அலுவலர் காலிப்பணியிடங்களுக்கு மாநில அளவிளான பதிவுமூப்பு விபரம் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இணை இயக்குனரால் வெளியிடப்பட்டுள்ளது.இதில், திண்டுக்கல் மாவட்ட பதிவுதாரர்கள் தொடர்பான விபரங்கள் www.dindigul.tn.nic.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.எனவே, தகுதியுள்ளவர்கள் தங்கள் பதிவு மூப்பு விபரத்தை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் ஐ.டி.ஐ., தகுதியுள்ளவர்கள் ஜன.,20க்குள், டிப்ளமோ தகுதியுள்ளவர்கள் ஜன.,21க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வர வேண்டும்.வரும்போது, அசல் கல்வி சான்றுகள், சாதிசான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி