வேலை நேரங்களில் நேர விரயம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு உ.பி. அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு ஊழியர்கள் பணியிலிருக்கும் போது திடீரென காணாமல் போனாலோ, மதிய உணவு இடைவேளைக்காக நீண்ட நேரம் எடுத்துக் கொண்டாலோ பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அம்மாநில முல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மதிய உணவுக்காக அரசு ஊழியர்கள் யாரும் தங்களது இல்லங்களுக்கு செல்லக்கூடாது என உத்திரப்பிரதேச மாநில பொதுப்பணித்துறை அமைச்சரான சிவபால் யாதவ், உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. டெல்லி ஆம் ஆத்மி அரசின் அதிரடி மாற்றங்கள் உ.பி அரசின் செயல்பாடுகளிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.