ஆதார் எண்களை வங்கி கணக்குகளுடன் இணைக்காத சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு மானியம் கிடைக்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் செய்தி குறிப்பில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. சமையல் எரிவாயு மானியத்தை வங்கி கணக்கில் செலுத்தும் முறை நாடு முழுவதும் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இது வரை நாடு முழுவதும் 2 ஆயிரம் கோடிக்கு மேலாக எல.பி.ஜி. மானிய விலையில் செலுத்தபட்டு உளள்தாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த முறை அமலில் உள்ள மாவட்டங்களில் மூன்று மாதத்திற்குள் வங்கி கணக்குடன் ஆதார் எண்களை இணைக்காதவர்களுக்கு மானியம் வழங்கப்பட மாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்.பி.ஜி. மானியத்தை வங்கி கணக்கில் செலுத்தும் முறை கடந்த ஜீன் மாதம் தொடங்கப்பட்டது. தமிழ் நாட்டில் திருச்சி மாவட்டத்தில் அதிகப்படியாக 80,546 வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர்.
ஆதார் எண்ணை கட்டாயமாக்க கூடாது என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் சமையல் எரிவாயு மானியம் பெற ஆதார் கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அமலும் ஆதார் எண் வழங்கப்படாத் அல்லது பெறாத வாடிக்கையாளர்களுக்கு மானியம் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.