8.26 லட்சம் பேர் HSC தேர்வு பதிவு எண் வழங்க நடவடிக்கை.மார்ச் 3ல் துவங்கும் பிளஸ் 2 பொது தேர்வை, 8.26 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இவர்களுக்கான பதிவு எண்கள், இம்மாத இறுதியில் வழங்கப்படுகின்றன.வரும், மார்ச் 3ல் இருந்து, 25 வரை, பிளஸ் 2 தேர்வுகள் நடக்கின்றன. இதற்கான இறுதிகட்ட ஏற்பாடுகளை, தேர்வுத் துறை, தீவிரமாக செய்து வருகிறது. இந்நிலையில், 'தேர்வு எழுதும் மாணவர் பட்டியலில், பள்ளி அளவில் திருத்தங்கள் இருந்தால், 20ம் தேதிக்குள், மாற்றம் செய்து, மாவட்ட கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். 21 முதல், 23 வரை, அந்த திருத்தங்களை, இணையதளம் வழியாக, மாவட்ட கல்வி அலுவலர்கள், சரி செய்ய வேண்டும்' என, 32 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட கல்வி அலுவலர்கள், திருத்தங்களை பதிவு செய்ததும், அந்த விவரம், நேரடியாக, சென்னையில் உள்ள, 'டேட்டா சென்டரில்' பெறப்படும். பெறப்பட்ட புள்ளி விவரத்தின்படி, 8 லட்சத்து, 26 ஆயிரத்து, 67 மாணவர்கள், தேர்வை எழுதுகின்றனர். பிளஸ் 2 செய்முறை தேர்வு, பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து துவங்கும் என்பதால், இம்மாத கடைசி வாரத்தில், 8.26 லட்சம் மாணவர்களுக்கும், பதிவு எண்களை வழங்க, தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. 27ம் தேதியில் இருந்து, 31ம் தேதிக்குள், மாணவர்களுக்கு, ஏழு இலக்கங்கள் கொண்ட பதிவு எண் வழங்கப்படும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி