சில்லரை விற்பனையாளர் பணிக்கு இலவச பயிற்சி: 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஜன. 9:  சில்லரை விற்பனைச் சார்ந்த பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளதை கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகம் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்துடன் இணைந்து 10,000 இளைஞர்களுக்கு சில்லரை விற்பனையாளர் பணிக்கான குறுகியகால 21 நாள் திறன் பயிற்சியினை வழங்கிட திட்டமிட்டுள்ளது.

இப்பயிற்சியானது தமிதூச்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனங்களில் அளிக்கப்படும். இப்பயிற்சி தமிழக அரசால் முழுக்க முழுக்க இலவசமாக வழங்கப்படுகிறது.

இப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் சென்னை, தஞ்சாவூர், வேலூர், திருநெல்வேலி, மதுரை, சேலம், விருதுநகர், கடலூர், காஞ்சிபுரம், தர்மபுரி, நாகர்கோவில், சிவகங்கை, விழுப்புரம், நாமக்கல், திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், திருவண்ணாமலை, ஈரோடு மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில், 10.1.2014 முதல் வழங்கப்படும்.

இப்பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 45 வயது வரையான ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 3 வார காலமாகும். பயிற்சி தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களது அசல் கல்வி சான்று, சாதி சான்று, இருப்பிட முகவரிக்கான சான்றாக குடும்ப அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவு சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றின் ஏதேனும் ஒன்றின் அசல் மற்றும் சமீபத்தில் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்கள் கொண்டு வர வேண்டும். மேலும் இப்பயிற்சியில் சேர இச்சான்றுகளின் 2 நகல்களுடன், பயிற்சி நிலையத்தில் அளிக்கப்படும் விண்ணப்பத்தினையும் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட கல்வித்தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு தமிழகத்திலுள்ள மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள 20 கூட்டுறவு மேலாண்மை நிலையங்களிலும் 21 நாள் இலவச பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சியின் முடிவில் தனியார் துறை சில்லரை விற்பனை சேவை நிறுவனங்களில் பணிபுரிய ஏதுவாக வேலைவாபுச்ப்பு முகாம்கள் நடைபெறும்.

இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தமிழகத்திலுள்ள 20 கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள் மற்றும் சென்னை அண்ணா நகரில் உள்ள நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் உரிய விண்ணப்பங்கள் பெற்று பயிற்சியில் சேருமாறு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக இயக்குனர் முத்துவீரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

நன்றி : மாலைமலர் 

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி