58 வயதிலும் ஆசிரியர் ஆகலாம்

மதுரையில் நடந்த பி.எட்., ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணியில், 58 வயது பட்டதாரி பங்கேற்றார். 


மதுரை தமிழ்ச் சங்கம் ரோட்டை சேர்ந்த சுப்புமுத்து மகன் மதியரசு. இவர், 10.6.1956ல் பிறந்தார். பி.ஏ., (வரலாறு), பி.எட்., படித்து, பல ஆண்டுகளாக ஆசிரியர் பணிக்காக முயற்சி செய்தார். கடந்த ஆக.,18ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) தாள் 2ல் தேர்ச்சி பெற்றார்.


மதுரை ஓ.சி.பி.எம்., பள்ளியில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றார். இவருக்கு, ஆசிரியர் பணி வாய்ப்பு கிடைத்தால், இந்தாண்டு அதிகபட்சமாக 4 மாதங்களில் பணியில் இருந்து ஓய்வு பெற்று விடுவார்.ஓய்வு பெறும் ஆண்டிலும், டி.இ.டி., தேர்வில் பங்கேற்று ஆசிரியர் ஆகிவிட வேண்டும் என்ற மதியரசுவின் முயற்சியை கல்வி அதிகாரிகள் பாராட்டினர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி