வடக்கு ரயில்வேயில் 5,679 காலியிடங்கள்

இந்திய ரயில்வேயின்கீழ் இயங்கி வரும் வடக்கு ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பாயிண்ட்ஸ்மேன், கலாசி உதவியாளர், கேட்மேன், டிராக்மேன், கேரேஜ் கிளீனர், டிஎஸ்எல் கலாசி, துப்புரவுப் பணியாளர், சமையலர், மருத்துவமனை உதவியாளர் ஆகிய பணிகளில் ஏதேனும் ஒரு பணிக்கு விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


காலியிடங்கள்: பாயிண்ட்ஸ்மேன் - 688, கேட்மேன் - 262, கலாசி உதவியாளர் - 1,895, டிராக்மேன் - 2,529, கேரேஜ் கிளீனர் - 272, டிஎஸ்எல் கலாசி - 22, துப்புரவுப் பணியாளர் - 5, சமையலர் - 2, மருத்துவமனை உதவியாளர் - 4.

வயது வரம்பு: 33-க்குள் (ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்)

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/-

விண்ணப்பிப்பது எப்படி?:

விண்ணப்பப் படிவத்தை இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும். விண்ணப்பப் படிவத்தில் நீலம் அல்லது கறுப்பு நிற பால் பாயிண்ட் பேனாவால் அடித்தல், திருத்தல் இல்லாமல் எழுதவேண்டும். சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும்.

இணையதளத்தில் இருந்து பிரிண்ட் செய்த சலானைப் பயன்படுத்தி சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 3311403687 என்ற அக்கவுண்ட் எண்ணில் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் அல்லது ‡NEFT Code No - CBINO280311 என்ற எண்களைப் பயன்படுத்தி வேறு வங்கியிலும் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். விண்ணப்பக் கட்டணத்தை Assistant Personnel Officer, Railway Recruitment Cell, Lajpat Nagar - I, New Delhi – 110024 என்கிற முகவரிக்கு இந்தியன் போஸ்டல் ஆர்டரும் அனுப்பலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் கட்டணம் செலுத்திய சலான் அல்லது போஸ்டல் ஆர்டர் ரசீதையும், பத்தாம் வகுப்புச் சான்றிதழ் நகலையும், சாதிச் சான்றிதழ் நகலையும் சேர்த்து அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Assistant Personnel Officer(RRC), 
Railway Recruitment Cell, 
Lajpat Nagar - I, 
New Delhi - 110 024.

விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 10.02.2014

விவரங்களுக்கு: www.rrcnr.org/


Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி