கடந்த 2012ல் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான தேர்வை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கூட்டுறவு சங்கத் தேர்தலில் வெளிப்படைத் தன்மையில்லை என, தேர்வெழுதிய வின்சென்ட், கரிகாலன் உட்பட 4 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி, முறைகேடு நடந்துள்ளதால் தேர்வை ரத்து செய்துமறு தேர்வு நடத்த உத்தரவிட்டார்.கூட்டுறவு சங்கங்களில் 3,589 காலில் பணி இடங்களுக்கு, கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 9-ல் தேர்வு நடந்தது.