தமிழக அரசின் மருத்துவத் துறையில் 323 மருந்தாளுநர் (பார்மசிஸ்ட்) பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்காக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை 1,445 பேர் அடங்கிய பதிவுமூப்பு பட்டியலை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்திடம் வழங்கியது. சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் வருகிற 20-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாக கட்டிடத்தில் (7-வது மாடி) இயங்கி வரும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.