குரூப் 2 தேர்வு அட்டவணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.


நடப்பாண்டிற்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டில் நேர்காணல் இல்லாத 1,181 பணியிடங்களுக்கான குரூப் 2-A தேர்வு  மே மாதம் 18-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான அறிவிப்பு இம்மாதத்தின் 3வது வாரத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர்க்கான தேர்வு ஜூன் மாதம் 15-ஆம் தேதி நடைபெறும் என்றும், இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் இரண்டாம் வாரம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக பணிக்கு இந்தாண்டு கூடுதல் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கடந்தாண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி 5,566 பணியிடங்களுக்காக நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். 

இந்த ஆண்டுக்கான குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான காலியிடங்கள் குறித்த விவரங்கள் இன்னும் பெறப்படவில்லை என்பதால், காலியிட விவரம் தற்போதைய அட்டவணையில் இடம் பெறவில்லை.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி