அரசுக் கல்லூரி உதவி பேராசிரி யர் தேர்வு மதிப்பெண் பட்டியல் தேர்வு பட்டியல் இன்று (26.01.14 ) ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

அரசுக் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு மதிப்பெண் பட்டியல் தேர்வு பட்டியல் இன்று (26.01.14 ) ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. 

அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு 1093 உதவி பேராசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் முறை மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படஉள்ளனர். உதவி பேராசிரியர் பணிக்கு மாநிலம் முழுவதும் ஏறத்தாழ 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு சென்னையில் கடந்த நவம்பர் மாதம் இறுதி முதல் டிசம்பர் முதல் வாரம் வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. பணிஅனுபவம், பி.எச்டி. பட்டம், ஸ்லெட், நெட்தேர்ச்சி, எம்.பில். ஆகியவற்றுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது.மொத்த மதிப்பெண் 24ஆகும். 

நேர்முகத்தேர்வுக்கு 10 மதிப்பெண் ஒதுக்கீடுசெய்யப் பட்டுள்ளது.சான்றிதழ் சரிபார்ப்பின் போது, சில மையங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பெறுவதற்கு (பி.எச்டி. அல்லது முதுகலை படிப்புடன் நெட், ஸ்லெட் தேர்ச்சி) முன்பு இருந்த பணிஅனுபவத்துக்கும் மதிப்பெண் வழங்கப்பட்ட தாகவும், தற்போது அந்த தவறுகளை கண்டறிந்து, குறைந்தபட்ச தகுதிக்கு பின்னர் பெற்ற பணிஅனுபவத்துக்கு மட்டுமே மதிப்பெண் வழங்கப் பட்டிருப்ப தாகவும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரி வித்தனர்.பணி அனுபவத்துக்கு ஓராண்டுக்கு 2 மதிப்பெண் வீதம் அதிகபட்சம் 7.5 ஆண்டு களுக்கு 15 மதிப்பெண் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.எனவே, உதவி பேராசிரியர் தேர்வில் இந்த மதிப்பெண் வெற்றி தோல்வியை முடிவுசெய்யக்கூடிய தாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.அடுத்த கட்ட தேர்வான நேர்முகத்தேர்வுக்கு ஒரு காலியிடத் துக்கு 5 பேர் என்ற வீதத்தில் ஏறத்தாழ 5,500 பேர் தேர்வு செய்யப்படுவர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி